விஜய் ட்விட்டர்
சினிமா

Vijay: தமிழ் சினிமாவில் Highest paid நடிகர் விஜய் - சம்பளம் ரூ.200 கோடியா? உண்மை என்ன?

Keerthanaa R

நடிகர் விஜய்யின் சம்பளம் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். சிறியவர் முதல் பெரியவர் வரை இவருக்கு ஃபேன் பேஸ் அதிகம். இவரது சிரிப்புக்கும், நடிப்புக்கும் குவிந்த ரசிகர்கள் காலப்போக்கில் இவரது பேச்சுக்கு குவிய ஆரம்பித்தனர்.

மாஸ்டர், பிகில், வாரிசு என அவரது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் அவரது ஸ்பீச் படு வைரலானது.

இந்நிலையில், தளபதி விஜய் குறித்த மற்றொரு செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நடிகர் விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் பெறுகிறார் என்ற செய்தி தான் அது.

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்தியா டுடே குழு விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் பேசியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

“தளபதி விஜய் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். ஆனால் அவரது சம்பளம் ரூ.200 கோடி இல்லை. ஒரு படத்திற்கு விஜய் தற்போது பெறும் சம்பளம் ரூ.125 கோடி. வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது சம்பளம் உயர்த்தப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது

விஜய்யின் மார்கெட், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன், டிஜிட்டல், மற்றும் டிவி உரிமங்கள் மூலம் கிடைக்கும் வரவேற்பை பார்த்து தயாரிப்பாளர்கள் விஜய்யை நடிக்க வைக்க அவருக்கு அதிக சம்பளம் தர முன்வருகின்றனர்.

விஜய் நடிப்பதாக இருந்தால் கதையை கூட பொருட்படுத்துவதில்லை. நிச்சயம் படம் வெற்றியடைவதாக அவர்கள் நினைக்கின்றனர். தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கின்றனர் எனவும் அந்த செய்தியறிக்கை கூறுகிறது.

தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இது லோகேஷின் LCUவின் அடுத்த படமாக இருக்கும் என பலத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?