Jailer Audio Launch: ”குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்து கொண்ட சூனியம்” என்ன பேசினார் ரஜினி? Twitter
சினிமா

Jailer Audio Launch: ”குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்து கொண்ட சூனியம்” என்ன பேசினார் ரஜினி?

குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். 'குடிப்பழக்கம்' எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். உங்கள் குடும்பம் பாதிக்கப்படும்.

Keerthanaa R

நேற்று சென்னையில் நடைப்பெற்ற ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனது குடிப்பழக்கத்தை பற்றி வெளிப்படையாக பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் என இந்திய சினிமாவின் அனைத்து மொழி சூப்பர்ஸ்டார்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும், முதன்முறையாக நடிகை தமன்னா ரஜினிகாந்த்துடன் நடிக்கிறார். 23 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனும் ரஜினிகாந்த்துடன் இணைகிறார். இதனால் ஜெயிலர் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Rajinikanth

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அண்ணாத்த படத்திற்கு பிறகு சரியான கதையோ, இயக்குநரோ எனக்கு அமையவில்லை. அதனால் தான் இவ்வளவு இடைவெளி” என்றவர், இயக்குநர் நெல்சன் தன்னை சந்தித்து கதை சொன்ன நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

“காலை 10 மணிக்கு வரச்சொன்னபோது, நெல்சன் 11.30க்கு வரவா என்று கேட்டுவிட்டு 12 மணி வரை ஆபீஸ் பக்கம் ஆளயே காணோம். பின்னர் வந்தவர் முதலில் காபி கேட்டார். குடித்துவிட்டு ஒன் லைனை எனக்கு சொன்னார். சொல்லிட்டு, என்னை அவர் பாத்தபோது, ‘இவன் எப்படி ஹேரோவா’ என்று யோசித்தது எனக்கு தெரிந்தது” என்று நகைச்சுவையாக பேசினார் சூப்பர்ஸ்டார்

தொடர்ந்து தனக்கு அந்த ஒன் லைன் பிடித்திருந்ததாகவும், இயக்குநர் அப்போது பீஸ்ட் இயக்கிக்கொண்டிருந்ததால், அந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறியதாகவும் சொன்னார்.

ஜெயிலர் அறிவிச்ச அப்புறம் தான் பீஸ்ட் ரிலீஸ் ஆச்சு. எல்லாரும் நெல்சன்க்கு படம் குடுக்கணுமா என்று யோசிக்க சொன்னார்கள். பீஸ்ட் முடிஞ்சு அவரு முழுக் கதை சொன்னப்போ அது எனக்கு ரொம்ப புடிச்சது. ஒரு இயக்குநர் எப்போதும் தோற்பதில்லை, அவர் எடுக்கும் சப்ஜெக்ட்கள் தான் தோற்கிறது.” என்று கூறினார் ரஜினிகாந்த்.

இயக்குநர் நெல்சன் மிகவும் நகைச்சுவையானவர் என்றும் வேலை விஷயத்தில் மிகவும் கறார் என்றார். காவாலா பாடலில் நிறைய நடனம் இருக்கும் என்று கூறிவிட்டு இரண்டே ஸ்டெப் தான் கொடுத்தார்கள் என்று செல்லமாக குற்றம்சாட்டிய நடிகர், படத்தில் பிளாக் காமெடி நன்றாக அமைந்திருப்பதாகவும், எதிர்பார்க்காத நேரத்தில் நகைச்சுவைகள் இடம்பெற்றிருக்கிறது என்பதையும் பகிர்ந்துகொண்டார்.

மேலும் பேசியவர், “குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். 'குடிப்பழக்கம்' எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். உங்கள் குடும்பம் பாதிக்கப்படும்.

குறைகாத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. அதானால நம்ம வேலைய பாத்துட்டு போய்கிட்டே இருக்கணும்” என்று தனது ரசிகர்களுக்கு அறிவுறை வழங்கினார்.

Ramya Krishnan - rajinikanth

தன் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு 1977லேயே பிரச்சினை வந்தது என்று கூறியவர், அப்போது கமல் ஹாசன் உச்ச நட்சத்திரமாக இருந்தார் எனவும், தனக்கு இந்த பட்டம் வேண்டாம் எனவும் கூறினாராம் ரஜினிகாந்த்.

”ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல." என்றார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடிகர் கவின் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணனிடம், “ 'படையப்பா' படத்துல பழி வாங்குவேன்னு சொல்லிதான் முடிப்பீங்க?” என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு ரம்யா கிருஷ்ணன், “ஆகஸ்ட் 10-ம் தேதி பார்ப்பீங்க!” என்றார்!

ஆகஸ்ட் 10ஆம் தேதி பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?