ரஜினிகாந்த் : வெளியானது ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் “காவாலா” - எப்படி இருக்கிறது? ட்விட்டர்
சினிமா

ரஜினிகாந்த் : வெளியானது ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் “காவாலா” - எப்படி இருக்கிறது?

Keerthanaa R

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல், “காவாலா” வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளார் நடிகை தமன்னா. தன் நளினமான நடனத்திற்கு பெயர்பெற்றவர், இந்த பாடலில் சூப்பர் ஸ்டாருடன் செம்மயாக குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட் திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் நெல்சன் திலீப்குமார். முதல் படத்திலேயே நயன்தாராவை வைத்து இயக்கிய கோலமாவு கோகிலா, அதன் பிறகு வந்த டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இது பெரிதும் வெற்றியடையாத நிலையில், ரஜினிகாந்த்தை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் நெல்சன்.

ஜெயிலர் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மட்டுமல்லாது, இந்திய சினிமாவின் பல சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ளனர். நடிகர்கள் மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் சிங்கிளான “காவாலா” பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?