Jailer vs Blue Sattai Maran: பணம் வாங்கிட்டு படத்தை Promote செய்றாங்களா? வெளியான வீடியோ twitter
சினிமா

Jailer vs Blue Sattai Maran: பணம் வாங்கிட்டு படத்தை Promote செய்றாங்களா? வெளியான வீடியோ

”ஜெயிலர் எழுதப்பட்டதிலேயே குறை இருக்கிறது. ரஜினியால் கூட இந்த படத்தை காப்பாற்ற முடியவில்லை. ரஜினி ரசிகர்கள் மட்டும் தான் இந்த படத்தை கொண்டாடமுடியும். இயக்குநர் விக்ரம் போன்ற படத்தை எடுக்க நினைத்து தோல்வியுற்றிருக்கிறார்”

Keerthanaa R

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகளவிலும் சரி, இந்தியாவிலும் சரி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். தனது விமர்சனங்களால் பல முறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மாறன். இவரும் இவரது விமர்சனங்களும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. மீம்களாக கூட பார்த்திருப்போம்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியிருந்த ஜெயிலர் திரைப்படத்திற்கும் இவர் விமர்சனம் செய்திருந்தார்.

”ஜெயிலர் எழுதப்பட்டதிலேயே குறை இருக்கிறது. ரஜினியால் கூட இந்த படத்தை காப்பாற்ற முடியவில்லை. ரஜினி ரசிகர்கள் மட்டும் தான் இந்த படத்தை கொண்டாடமுடியும். இயக்குநர் நெல்சன், விக்ரம் போன்ற படத்தை எடுக்க நினைத்து தோல்வியுற்றிருக்கிறார்” என்று விமர்சித்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இவரது விமர்சனம் கண்டு மனமுடைந்ததாகவும், இது குறித்து பேச தன்னை நடிகர் நேரில் அழைத்ததாகவும் மாறன் இன்று காலை பதிவிட்ட தன் ட்வீட்டில் கூறியிருக்கிறார்.

அந்த ட்வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பில் சில சங்கடமான நிகழ்வுகள் ஏற்பட்டதாகவும், இது குறித்த வீடியோவை இன்று காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாகவும் மாறன் தெரிவித்திருந்தார்.

”நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்படும் ஒரு நாள் முன்பாக அவரது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான செய்யூர் பாலு என்னை தொடர்புகொண்டார்.

”படம் குறித்த எனது விமர்சனமும், சமூக வலைத்தள சாடல்களும் நடிகரை பாதித்திருக்கிறது, இதனால் நேரில் சந்தித்து இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ளலாம் என்று ரஜினி கூறியதாக செய்யூர் வேலு என்னிடம் கூறினார்”

முதலில் இந்த சூழலில் ரஜினியை தான் சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்த மாறன், பிறகு மரியாதை நிமித்தமாக சந்திப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளார். சில நிபந்தனைகளையும் போட்டிருக்கிறார்

சந்திப்பின் சில நிகழ்வுகளை மாறன் பதிவு செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். “ஏனென்றால், ’மாறன் தலைவரிடம் மன்னிப்பு கேட்டார்’ என்று போலியான செய்திகள் பரவிவிடும். இதனால் என் மொபைலை பயன்படுத்த அனுமதி வேண்டும்” என்று கேட்டுள்ளார் மாறன்.

முதலில் இதனை நடிகர் ரஜினியின் தரப்பு மறுத்துள்ளனர். ”தலைவர் இவ்வாறான தனிப்பட்ட சந்திப்புகளில் மொபைல் ஃபோன் பயன்படுத்துபவர்களை சந்திக்கமாட்டார்.” என்றுள்ளனர்.

எனில் என்னால் அவரை சந்திக்க இயலாது என்று மாறனும் மறுத்திருக்கிறார். பின்னர் ரஜினியின் தரப்பு இந்த விதிமுறைக்கு ஒப்புக்கொண்டனர் எனவும் ரஜினியை தான் சந்தித்தாகவும் மாறன் தெரிவித்தார்.

எதிர்பார்த்தது போலவே அங்கு சில கசப்பான நிகழ்வுகள் நடந்ததாகவும், அது பற்றிய வீடியோவை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார் மாறன்.

பலரும் வீடியோவை பார்க்க ஆவலாக காத்திருப்பதாக கமெண்ட் செய்துவந்தனர்.

இந்நிலையில், வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு ஒரு ஓட்டலில் சென்று மற்றவர் சாப்பிட்டதற்கு பில் கொடுக்கும் காமெடி காட்சி ஒன்றினை மீம் வீடியோவாக மாற்றி பதிவிட்டுள்ளார் மாறன்.

அதாவது, பணம் வாங்கிக்கொண்டு எல்லோரும் ஜெயிலர் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்து வருவதாக ஜாடையாக பேசியுள்ளார் மாறன். தான் நிஜமான ரிவ்யூ கொடுத்ததற்கு தன்னை ரசிகர்களும், ரஜினிகாந்தின் தரப்பும் மிரட்டுவதாக அந்த வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்

இவரது இந்த வீடியோ ரிலீஸுக்கு ஆவலாக காத்திருந்த ட்விட்டர்வாசிகள் தற்போது மாறனை கலாய்த்து வருகின்றனர். அதில் ஒருவர், “நீங்கள் பேசி வீடியோ வெளியிடுவீர்கள் என்று நினைத்தேன்” என்றார். அதற்கு மாறன், “விரைவில் அதுவும் நடக்கும் என்று கூறியுள்ளார்.

ஜெயிலர் படம் வெளியானதில் இருந்தே, படம் குறித்த அவதூறான விமர்சாங்களையும், மற்ற படங்களுடனான வசூல் ஒப்பீடுகளையும் பகிர்ந்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?