Jailer தவிர வேறு என்ன படம் இந்த வாரம் பார்க்கலாம்? List of OTT releases  Twitter
சினிமா

Jailer தவிர வேறு என்ன படம் இந்த வாரம் பார்க்கலாம்? List of OTT releases

Priyadharshini R

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் மம்மூட்டி, சுனில், ஜாக்கி ஷ்ராப், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

எல்லாருக்கும் ஜெயிலர் ஃபீவர் இந்த வாரம் இருக்கும். மலையாளத்தில் கூட தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் ஜெயிலர் எனும் மற்றொரு படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் ஜெயிலர் தவிர வேறு என்னென்ன படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் பார்க்கலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Vera Maari Office (Tamil) Aha

இளைஞர்கள் ஆஃபீஸ் வாழ்க்கையை சொல்லும் சீரிஸ் தான் `வேற மாறி ஆஃபீஸ்’. இது ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆஹா தமிழில் வெளியாகவுள்ளது. விஜே பார்வதி, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர்.

மாவீரன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் `மாவீரன்’. ஒரு கார்டூன் ஆர்டிஸ்ட்டுக்கு, சக்தி கிடைத்து எப்படி குப்பத்து மக்களை காப்பாற்றுகிறார் என்பதே கதை! இது ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

போர் தொழில்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான படம் `போர் தொழில்’. ஒரு சீரியல் கொலைகாரனை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை! sonyLIV ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் `ஜெயிலர்’. இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ஜெயிலர்

தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `ஜெயிலர்’. இந்த படமும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

வான் மூன்று

முருகேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `வான் மூன்று’. சுஜித் - ஸ்வாதி, ஜோஷ்வா - ஜோதி, சிவன் - சித்ரா எந்த மூன்று ஜோடிகளின் காதல் கதையை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது. இது ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஹா தமிழில் வெளியாகவுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?