Avatar 2 Twitter
சினிமா

Avatar 2 : இணையத்தில் கசிந்த அவதார் 2 டிரெய்லர் - படக்குழுவினர் அதிர்ச்சி

Priyadharshini R

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகிப் பலத்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அவதார். ரூ.1,500 கோடி பட்ஜெட், 3 டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

முதல் பாகத்தின் வெற்றி அமோகமாகக் கிடைத்ததால் கடந்த- 2016 ஆம் ஆண்டு “அவதார் 2” படத்தை 5 பாகங்களாக எடுக்கப் போவதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.

Avatar 2

அவதார் 2 - ரிலீஸ் தேதி 16, 2022 டைட்டில்: The Way of Water

அவதார் 3 - ரிலீஸ் தேதி 20, 2024 டைட்டில்: The Seed Bearer

அவதார் 4 - ரிலீஸ் தேதி 18, 2026 டைட்டில்: The Tulkun Rider

அவதார் 5 - ரிலீஸ் தேதி 22, 2028 டைட்டில்: The Quest for Eywa

Avatar 2

தற்போது அவதார் 2 படத்தை இந்தாண்டுக்குள் வெளியிடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உருவாகி வரும் அவதார் 2 படத்தை உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” (Avatar: The Way of Water) என்று பெயரிட்டுள்ளனர்.

மே 6 ஆம் தேதி இந்தப் படத்தின் டீசர், டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியான நிலையில் டிரெய்லர் முன்கூட்டியே எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?