Siddharth Instagram
சினிமா

Siddharth: இந்தியில் பேசிய CRPF அதிகாரிகள், எழுந்த சர்ச்சை - ஆவேசப்பட்ட சித்தார்த்

Keerthanaa R

ஆளே இல்லாத மதுரை விமான நிலையத்தில் தன் பெற்றொரை சி ஆர் பி எஃப் அதிகாரிகள் துன்புறுத்தியதாகவும், ஆங்கிலத்தில் பேசச் சொல்லிக் கேட்டபோதும் தொடர்ந்து அவர்கள் இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். தனது சமூக வலைத்தள பக்கங்களில் இவர் வெளியிடும் கருத்துகளால் எப்போதும் சர்ச்சை இவரை சுற்றியே இருக்கும்.

இந்தி திணிப்புக்கு எதிராக பல முறை குரல் கொடுத்துள்ளார்.

தற்போது இவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை விமான நிலையத்தில்அவரது பெற்றோரை சி ஆர் பி எஃப் அதிகாரிகள் துன்புறுத்தியதாக அந்த பதிவில் சித்தார்த் குற்றம்சாட்டியிருக்கிறார்.

“ஆளே இல்லாத மதுரை விமான நிலையத்தில் சி ஆர் பி எஃப் அதிகாரிகளால் 20 நிமிடங்களுக்கு தொல்லை செய்யப்பட்டேன். வயதான என் பெற்றோரை சங்கடத்திற்கு ஆளாக்கினார்கள்.

அவர்களை பையிலிருக்கும் காயின்களைக் கூட வெளியில் எடுக்க சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தினர். ஆங்கிலத்தில் பேசக் கூறி கேட்டாலும் மீண்டும் மீண்டும் எங்களிடம் இந்தியிலேயே பேசினர்” என்று பதிவிட்டிருந்தார் சித்தார்த்.

மேலும், “எதிர்த்துக் கேட்டபோது, இந்தியாவில் இப்படித்தான் என்று கடுமையாக பதிலளித்தனர் சி ஆர் பி எஃப் அதிகாரிகள்.

வேலையில்லாதவர்கள் அதிகாரத் திமிரைக் காட்டுகின்றனர்” என்றும் அவர் கூறியிருந்தார்.

சித்தார்த்தின் இந்த பதிவு இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகிறது. நடிகருக்கு ஆதரவளித்து பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?