Kamal Haasan Twitter
சினிமா

பட வாய்ப்புகளை இழந்த கமல்ஹாசன் - காரணம் இதுதானா?

Keerthanaa R

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இன்று விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. நான்கு வருடங்களுக்குப் பிறகு, வெளிவந்திருக்கும் உலக நாயகனின் இத்திரைப்படத்திற்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ்.


முற்றிலும் ஒரு ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் விக்ரம் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பட்டாளம் பெரிது. சிறப்பு தோற்றத்தில் நடிப்பின் நாயகன் சூரியாவும் இணைந்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.

Kamal Haasan

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் நடந்த ஒரு இன்டெர்வியூவில், கமல்ஹாசன் ஒரு முறை, முற்றிலுமாக பட வாய்ப்புகளைத் தான் இழந்ததாகக் கூறியிருந்தார். கமலுக்கே பட வாய்ப்பு பறிபோனதா என்று தானே யோசிக்கிறீர்கள்? அதற்கான காரணம் தெரியுமா?


களத்தூர் கண்ணம்மாவில், ஜெமினி-சாவித்திரி தம்பதிக்கு மகனாக நடித்து, 5 வயதில், முதன் முதலில் கமல்ஹாசன் திரையில் தோன்றினார். பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, ஆனந்த ஜோதி போன்ற படங்களில், அன்றைய உச்ச் நட்சத்திரங்களுடன் நடித்திருந்தார் கமல்.

Sivaji Ganesan-Kamal

5 வயதில் நடிக்க வந்த கமல், ஒரு முறை, தனது முன் பற்களை இழந்ததால், குழந்தை நட்சத்திரமாக நடிக்கப் பட வாய்ப்புகள் பறிபோனதாகக் கூறியிருக்கிறார்.

அதன் பின் எந்த வாய்ப்பும் கிடைக்காமல், கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, உதவி நடன இயக்குநராக மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்த கமல்ஹாசன், தன் திரை தந்தை கே பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் மூலம் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கினார்.

Gemini Ganesan

"கிளிப்பிள்ளை போல எனக்கு சொல்லிக்கொடுத்ததை தான் நான் செய்துகொண்டிருந்தேன்”. சிறு வயதில், எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களோடு கைகோர்த்திருக்கிறேன், அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று நான் பின்னர் தான் உணர்ந்தேன்" என்றார் கமல்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?