Kamal Hassan : ஹெச்.வினோத்துடன் அடுத்த படமா? இளம் இயக்குநர்களுடன் லைனப்- வெளியான தகவல்கள் Twitter
சினிமா

Kamal Hassan : ஹெச்.வினோத்துடன் அடுத்த படமா? இளம் இயக்குநர்களுடன் லைனப்- வெளியான தகவல்கள்

Antony Ajay R

நடிகர் கமல் ஹாசன் அடுத்ததாக துணிவு படத்தை இயக்கிவரும் ஹெச் வினோத்துடன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, விவேகம் படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தை இயக்கிவருகிறார் ஹெச்.வினோத்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட தனித்துவமான படங்களை இவர் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் 3 படங்கள் ஒப்பந்தமாகியிருப்பதாக போனி கபூர் கூறியிருந்தார். 3வது படமான துணிவுக்குப் பிறகு இருவரும் என்னென்ன மாதிரியான படங்களில் பணியாற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது.

H.vinoth

துணிவுக்கு அடுத்ததாக அஜித் குமார் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் ஹெச்.வினோத் கமல் ஹாசனுடன் இணைகிறார் என செய்திகள் வெளியானது.

ஆனால் அதில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. ஹெச்.வினொத் அடுத்ததாக ஒரு த்ரில்லர் படத்தை இயக்குகிறார். அதில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த படத்தில் கேமியோ ரோலில் கமல் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் இயக்குநர்களுடன் நடிக்க கமல் விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில் கமல் - வினோத் கூட்டணியும் அமைய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

கமல் அடுத்தடுத்து பெரியப் படங்களில் கமிட் ஆகி வருகிறார். குறிப்பாக விக்ரம் வெற்றிக்கு பிறகு இளம் இயக்குநர்களுடன் இணைவதில் ஆர்வம் காட்டுகிறார்.

அந்த வகையில் அவரது லைன் அப்பை ஒரு பார்வையிடலாம்,

பா.ரஞ்சித் கதை

கபாலி, காலா என ரஜினியை வைத்து ஹிட் கொடுத்த ரஞ்சித் கமலிடம் ஒரு ஒன்லைன் கூறியுள்ளார் என முன்னதாவே தகவல்கள் வந்திருந்தது. அந்த லைன் கமலுக்கும் பிடித்திருக்கிறதாம். சியான் விகரமின் தங்கலான் படபிடிப்புக்கு பிறகு அந்த கதை வேலைகளில் முழு மூச்சாக இறங்குவார் ரஞ்சித் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இருவருமே தங்கள் வேலைகளில் பிசியாக இருக்கின்றனர்.

வெற்றிமாறன் - கமல் கூட்டணி

தொட்டதெல்லாம் பொன் என்பது போல வெற்றிமாறனின் எல்லாப் படங்களும் ஹிட் அடித்திருக்கின்றன. இந்த சூழலில் வெற்றிமாறனுடன் இணைய தமிழ் திரையுலகைத் தாண்டியும் பல நடிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வெற்றிமாறன் கூட்டணி சில மாதங்களுக்கு முன்பே சலசலக்கப்பட்டது. ஆனால் விடுதலை, வாடிவாசல் என அவரது லைனப்பும் நெருக்கடியாக இருக்கிறது. தவிர, விஜயுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார்.

ரசிகர்களும் வடசென்னை 2 படத்துக்கு வெறித்தனமாக காத்திருக்கும் சூழலில் கமல் - வெற்றிமாறன் கூட்டணிக்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

வேட்டையாடு விளையாடு 2?

கமல் இளம் இயக்குநர்களுடன் இணைவது என்பது முன்பெல்லாம் சோதனை முறையில் தான் இருந்தது. அப்படி அவர் நடித்தப் படம் தான் வேட்டையாடு விளையாடு.

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வெற்றி வாகை சூடியிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் கவனம் செலுத்தியபடியே கமலிடம் வேட்டையாடு விளையாடு 2 படத்துக்கான மேலோட்டமான கதையையும் கூறியிருக்கிறார்.

கமல் ஓகே சொன்னால் தயாரிக்க வேல்ஸ் நிறுவனமும் தயாராக இருக்கிறது. ஆனாலும் இந்த படம் உருவாகும் என்பதற்கான நம்பத்தகுந்த தகவல்கள் எதுவுமில்லை.

விக்ரம் 2

லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் பெரிய தலையாக இருக்கிறார் கமல். விக்ரம் 2 குறித்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் விஜயுடன் அடுத்த படத்தில் இணைய தயாராக இருக்கிறார் லோகேஷ். அந்த படத்துக்குப் பிறகு விக்ரம் 2 அல்லது கைதி 2 வழியாக எல்.சி.யு-வின் அடுத்த படம் உருவாகிறது.

கமல் பெரிய லைனப்புடன் இருப்பதால் கைதி 2 தான் அடுத்தப்படம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மணிரத்னதின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து கமல் மற்றும் மணிரத்னத்தின் அடுத்தபடத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இதனை K234 என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில் மிஷ்கின் உள்ளிட்ட சில இயக்குநர்களும் கமலிடம் கதை சொல்லியிருக்கின்றனர். மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணாவுடன் கமல் தனது சொந்த கதையில் நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இப்போதைக்கு பிக்பாஸ் 6 மற்றும் இந்தியன் 2-வில் பிஸியாக இருக்கிறார் கமல்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?