salman - karan twitter
சினிமா

Bigg Boss: சல்மான் கானுக்கு டெங்கு உறுதி - பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார் கரண் ஜோஹர்

Keerthanaa R

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தவுள்ளார்.

இந்தி சினிமாவில் ஒரு தவிர்க்கமுடியாத பெயர் சல்மான் கான். 80,90களின் காதல் மன்னனாக அவர் வலம் வந்தார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸை இவர் தான் தொகுத்து வழங்குகிறார். 15 சீசன்கள் கடந்துள்ள நிலையில், தற்போது 16வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்குவார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரண் ஜோஹர் இதற்கு முன் பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சியை நடத்தினார். அதனால், இம்முறையும் இவர் தான் சல்மான் கானுக்கு பதிலாக நிகழ்ச்சியை நடத்த சரியான சாய்ஸ் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் கரண் ஜோஹரும் சல்மான் கானும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், கரண் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த வாரம் வெள்ளி கிழமை முதல், அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிக் பாஸ் 16 ஐ கரண் ஜோஹர் தொகுத்து வழங்குவார்.

இவர் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?