பிரபல கன்னட நடிகர் மரணம்; திரைத்துறையினர் இரங்கல் ட்விட்டர்
சினிமா

KGF 1: ”அவன் குறுக்க போயிடாதீங்க சார்” - பிரபல கன்னட நடிகர் மரணம்; திரைத்துறையினர் இரங்கல்

இது மீம் மெட்டீரியலாக, அடிக்கடி மக்கள் பேசும் டயலாக்காக மாறியது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணா கன்னட திரைத்துறையில் உதவி இயக்குநராக இருந்தார்.

Keerthanaa R

கேஜிஎஃப் படத்தில் நடித்த கிருஷ்ணா ஜி ராவ் என்ற நடிகர் உடல்நலக் குறைவு காரணமாக புதன் கிழமையன்று காலமானார்.

கன்னட திரையுலகில் பிரபலமான இவர், யாஷ் நடித்த கேஜிஎஃப் 1 படத்தில் பேசிய ஒரு வசனத்திற்காக புகழ் பெற்றிருந்தார்

கேஜிஎஃப் 2

நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் கேஜிஎஃப் 1 படத்தில் பார்வையற்றவராக நடித்திருந்தார்.

கேஜிஎஃப் பகுதியில் கொத்தடிமைகளாக நடத்தப்படுபவர்களுக்காக யாஷ் சண்டையிடும் காட்சியில், “அவன் குறுக்க போகாதீங்க சார்” என்ற வசனத்தை அவர் பேசியிருப்பார்.

இது மீம் மெட்டீரியலாக, அடிக்கடி மக்கள் பேசும் டயலாக்காக மாறியது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணா கன்னட திரைத்துறையில் உதவி இயக்குநராக இருந்தார்.

பிறகு திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால், இவை எல்லாவற்றையும் விட, கேஜிஎஃப் 1 ல் இவர் நடித்த கதாபாத்திரம் தான் அதிக ரசிகர்களை ஈர்த்தது.

2023 வெளியாகவுள்ள ‘நானோ நாரயணப்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா. இந்நிலையில், நுரையீறல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு கேஜிஎஃப் படக்குழு மற்றும் கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?