தொழில் அதிபர்கள் Twitter
சினிமா

The Legend சரவணன்: நடிகர்களாக மாறிய தொழிலதிபர்கள் - யார் யார் தெரியுமா?

நாளை சரவணன் நடிப்பில் லெஜண்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இதே போல நடிகர்களாக உருமாறிய சில தொழிலதிபர்களைப் பார்க்கலாம்.

Antony Ajay R

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் மூலம் நம் வீடுகளில் திரைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினார் சரவணன்.

தமன்னா. ஹன்சிகா என நடிகைகளுடன் அவர் நடித்த போது நாம் நினைத்திருக்கவில்லை அவர் வெள்ளித்திரையில் விரைவில் மிளிரப் போகிறார் என்று.

இப்படித் திடீரென தான் ஷாக் கொடுக்கிறார்கள் தொழிலதிபர்கள்.

நாளை சரவணன் நடிப்பில் லெஜண்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இதே போல நடிகர்களாக உருமாறிய சில தொழிலதிபர்களைப் பார்க்கலாம்.

டொனால்ட் ட்ரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் என்பதை நாம் அறிவோம்.

இவர் முக்கியமான தொலைக்காட்சி ஆளுமையும் கூட என்பது உங்களுக்கு தெரியாது தானே.

ட்ரம்ப் 14க்கும் மேற்பட்ட படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் கேமியோ ரோல் செய்திருக்கிறார்.

அவர் ஹோம் அலோன் 2 படத்தில் வரும் காட்சி...

பில் கேட்ஸ்

மைக்ரோ சாஃப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான Frasier-ன் 200வது எபிசோடில் கேமியோ ரோல் செய்திருக்கிறார். இதில் அவர் பில்கேட்ஸாகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரன் பஃபெட்

என்பிசியின் தி ஆபிஸ் தொடரில் 50 நிமிட இறுதி காட்சியில் வாரன் பஃபட் முதலாளியாக நடித்து அசத்தியிருப்பார்.

இது மட்டுமல்லாமல் Wall Street போன்ற பெரிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் Star Trek Beyond என்ற படத்தில் கேமியோ ரோல் செய்திருப்பார். அது அவரது ஆசையாம். ஆனால் அந்த படத்தில் அவரை அடையாளம் காண முடியாது. ஏனெனில் அவர் நடித்தது ஒரு ஏலியன் பாத்திரத்தில்.

எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ -வான எலான் மஸ்க் சில படங்களில் நடித்திருக்கிறார்.

The Big Bang Theory என்ற தொலைக்காட்சித் தொடரில் ஹொட்டலில் சப்ளை செய்யும் ஊழியராக வருவார்.

ஐயர் மேன் 2 படத்தில் அவர் தோன்றும் காட்சி...

ரிச்சர்ட் ப்ரான்சன்

எலான் மஸ்குக்கு விண்வெளி சுற்றுலாத் துறையில் போட்டியாளராக இருக்கும் விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனர் சில தொடர்கள், படங்களில் தோன்றியுள்ளார்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற தொடரான ஃப்ரெண்ட்ஸ் தொடரில் அவர் தோன்றும் காட்சி...

மைக்கெல் ப்ளூம்பெர்க்

தொழிலதிபர், எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்ட இவர் 2011ம் ஆண்டு The Adjustment Bureau என்ற படத்தில் 37 நிமிடங்கள் தோன்றும் காட்சியில் நடித்தார்.

லாரி எலிசன்

Oracle நிறுவனத்தின் நிறுவனர் iron man 2 படத்தில் நடித்துள்ளார்.

வான் ஸ்பீகல்

Snapchat நிறுவனத்தின் இணை நிறுவனரும் CEO -மாகிய வான் ஸ்பீகல் ஹெச்பிஓ-வின் சிலிகான் வேலி தொடரில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சிலிகான் வேலி

கிறிஸ் கார்ட்னர்

ஒரு நேரத்தில் இருக்க வீடு கூட இல்லாமல் ஒரு பொதுக் கழிப்பறையில் மகனுடன் அடைந்துக் கிடந்து தூங்கிய இவர் இப்போது மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.

இவரது வாழ்க்கை வரலாற்றைத் தளுவி எடுக்கப்பட்ட படம் தான் The Pursuit of Happyness.

வில் ஸ்மித் நடித்த இந்த படத்தின் இறுதி ஃப்ரேமில் இவர் தோன்றுவார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?