‘Leo’ director Lokesh Kanagaraj should undergo psych evaluation: Plea in court Twitter
சினிமா

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளிக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் சோதனை செய்ய வேண்டும் என்றும் லியோ படத்தை எல்லா ஊடகங்களில் ஒளிபரப்புவதையும் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிய வழக்கில் இயக்குநர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

Antony Ajay R

போதைப் பொருள் பயன்பாடு, பெண்கள் கொலை காட்சிகள், அதீத வன்முறை காட்சிகள் ஆகியவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களில் அதிகமாக இருப்பதனால் அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் மீது குற்றவியல் விசாரணை எடுக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்ற அந்த வழக்கில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் பார்த்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் ரூ.1000 வழங்க வேண்டும் என மனுதாரர் கேட்டிருந்தார்.

மதுரையைச் சேர்ந்த ராஜு முருகன் என்பவர் வன்முறை மிகுந்த லியோ படத்தை அனைத்து ஊடகங்களிலும் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் மீது ஆயுத சட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்தபோது லோகேஷ் கனகராஜ் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, லோகேஷ் கனகராஜ் தரப்பில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மண்டல தணிக்கை குழுவுக்கும் மனுதாரருக்கும் நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?