Leo: "இந்த படத்துல புது விஜய்யை பார்க்கலாம்" - நேர்காணலில் ஹின்ட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் twitter
சினிமா

Leo: "இந்த படத்துல புது விஜய்யை பார்க்கலாம்" - நேர்காணலில் ஹின்ட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

Keerthanaa R

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் லியோ. இப்படம் வருகின்ற 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள் விஜய், த்ரிஷா, மன்சூர் அலி கான், ப்ரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசையமைத்திருக்கிறார். படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது

படத்தில் இன்னும் மூன்று பாடல்கள் உள்ளதாகவும், அவை கதையுடன் ஒன்றி இருப்பதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி, லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்த ஹைப் ட்ரெயிலரில் இல்லை.

மாறாக, ஆபாச வார்த்தைகள் பேசும் விஜய்யை பலரும் சாடினர்.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் லியோ குறித்து பேசியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

அப்போது பேசியவர், வழக்கமான திரைப்படங்களில் இருப்பது போல லியோவில், விஜய்க்கு introduction song, intro fight, punch dialogue எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு 40 வயது நபர் எப்படி இருப்பார் என்பதை தான் இந்த படத்தில் விஜய்யாக காட்டியிருக்கிறோம். மேலும், மற்ற படங்களில் பார்த்த விஜய் இதில் இல்லை. அவரது பாணியில் அவர் எதுவுமே செய்யவில்லை. முழுதாக வேறு ஒரு நடிகரை நீங்கள் பார்க்கலாம் என்று கூறினார் லோகி.

"இந்த கதை முழுசா விஜய் அண்ணா தோள்கள்ல இருக்கு. அவர் அருமையாக ஹோம் ஒர்க் செய்திருக்கிறார். கதை சொல்லிட்டு, மூணு மாசம் கழிச்சு ஷூட் தொடங்கினப்போ, நா எந்த விஜய் அண்ணாவ எதிர்பார்தேனோ, அவர் இருந்தார்."

மேலும் இது ஒரு உணர்ச்சிகள் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் highs இதில் இருக்கிறது. குறிப்பாக படத்தின் கடைசி 40 நிமிடங்கள் ரொம்ப நல்லா இருக்கும். தேவையான சர்பிரைஸ்கள் இருக்கிறது.

தியேட்டரில் அமர்ந்து பார்க்கும் முழு அனுபவத்தை லியோ தரும். நிச்சயமாக ரிபீட் வேல்யூ உள்ள திரைப்படம் இது.

"இரண்டு காரணங்களுக்காக மக்கள் ரெண்டாவது வாட்டி தியேட்டருக்கு வருவாங்க. விஜய் அண்ணா மற்றும் திரைப்படத்தின் மேக்கிங்"

வரும் 19ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுவும் லோகேஷின் LCUவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னிடம் இன்னும் நிறைய கதைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றிரண்டை, தனது அசூசியேட் இயக்குநர்களிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார் இயக்குநர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?