LEO: ஃபர்ஸ்ட் லுக்கில் இந்த விஷயங்களை கவனித்தீர்களா? விஜயின் லுக் சொல்லும் விஷயங்கள் என்ன? Twitter
சினிமா

LEO: ஃபர்ஸ்ட் லுக்கில் இந்த விஷயங்களை கவனித்தீர்களா? விஜயின் லுக் சொல்லும் விஷயங்கள் என்ன?

சிங்கம் தான் காட்டுக்கும் ராஜா, இந்த படத்துக்கும் முக்கிய கதாப்பாத்திரம். பின்னர் ஏன் முதல் போஸ்டரில் கழுதைப் புலி? போஸ்டரில் எழுதியிருக்கும் பழமொழிக்கு அர்த்தம் என்ன?

Antony Ajay R

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. விஜய் முந்தைய படமான பீஸ்ட் மற்றும் வாரிசு திரைப்படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாக அமையாததால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து தெறி ஹிட்களை கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.

லியோபடத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜயின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாள் முழுவதையும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக ஆக்குவோம் என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின.

அதற்கு இணங்க விஜயின் பிறந்தநாள் தொடங்கிய இரவு 12 மணிக்கு முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் நான் ரெடி பாடலுக்காக வெளியான போஸ்டரிலும் இன்று வெளியான போஸ்டரிலும் விஜய் வெவ்வேறு கெட்டபில் இருப்பதைக் காணலாம்.

இரட்டை வேடத்தில் விஜய்

ஏற்கெனவே இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பார் என வதந்திகள் பரவிவந்த நிலையில் போஸ்டர்கள் அதனை உறுதிபடுத்தியிருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டில் லியோ என்பதுடன் பனிக்கட்டி மற்றும் நெருப்பின் எமோஜிகளை இணைத்திருந்தார். போஸ்டர்களும் ஒன்று பனி மலையிலும் மற்றொன்று பார்டியிலும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தன.

மெர்சல் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருப்பார். அதில் இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களான வெற்றி மற்றும் மாறன் பாத்திரங்கள் சகோதரர்கள். அவர்களில் ஒரு பாத்திரம் வெள்ளந்தியான மருத்துவர் மற்றும் ஒன்று அதிரடியான மேஜிக்காரர்.

அதேப் போல இந்த படத்திலும் இரண்டு கதாப்பாத்திரங்களின் குணாதீசியமும் இரண்டு துருவங்களாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

Leo First Look-ல் கழுதைப் புலி எதற்கு?

படத்தின் பெயர் லியோ. விஜயின் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயரும் லியோ. ஆனால் போஸ்டரில் எதற்கு கழுதைப் புலி? பொதுவாக சிங்கத்துக்கு கழுதைப்புலிகள் முக்கிய எதிரி. சிங்கத்தின் இறையைத் திருடித் தின்னும், கூட்டமாகவே சுற்றும்.

சிங்கம் தனியாக இருந்தே கழுதைப் புலிகளை விரட்டியடிக்கும். இந்த போஸ்டரில் விஜய்க்கு பின்னால் இருக்கும் கழுதைப் புலி படத்தின் வில்லன்களை எடுத்துக்கூறும் விதமாக வைக்கப்பட்டிருக்கலாம்.

ஏனெனில் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சஞ்சய் தத் என பல வில்லன்கள் இந்த படத்தில் இருக்கின்றனர். கழுதைப்புலிகள் போல...

வன்முறை

படம் வன்முறைகள் நிறைந்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. விஜய் கையில் இருக்கும் சுத்தியலும் தெறிக்கும் இரத்தமுமே அதற்கு சாட்சி.

இரண்டு பற்கள் தெறிக்க ஒரு கை ஓரமாக இருப்பதை பலரும் கவனித்திருக்க மாட்டீர்கள்.பேக்ரவுண்ட் நிச்சயமாக காஷ்மீர் தான். ஆனால் கதைக்களம் காஷ்மீரா அல்லது வெளிநாடாக இருக்குமா எனத் தெரியவில்லை.

Leo போஸ்டரில் இருக்கும் பழமொழி

"In the World of Untamed Rivers, Calm Water Either Become Divine Gods or Dreaded Demons - கட்டுக்கடங்காத நதிகளின் உலகில், அமைதியான நீர் தெய்வீகமான கடவுளாக மாறும் அல்லது பயங்கரமான பேயாக மாறும்" என போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இந்த வரிகள் ஒரு தாவோயிச பழமொழியாகும் (Googlr Bard AI கூறுவதன்படி).

கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படாத நதி என்பது தான் லியோ கதாப்பாத்திரம். சிங்கம் தானே காட்டுக்கு ராஜா? லியோ தெய்வீகமான கடவுளா? அல்லது பயங்கரமான பேயா? என திரையில் தெரிந்துகொள்ளலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?