Actor yash Twitter
சினிமா

Yash : நாடக கலைஞர் முதல் KGF வரை - யார் இந்த யாஷ்?

Priyadharshini R

தென்னிந்திய உட்சநட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் யாஷ், அவரின் திரைத்துறையில் கடந்து வந்த பாதைகள் குறித்துக் காண்போம்,

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பூவனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் நவீன்குமார் கவுடா என்ற யாஷ். இவரின் தந்தை கன்னட அரசு பேருந்தின் ஓட்டுநராக இருந்துள்ளார். குழந்தைப் பருவத்தை மைசூரில் கழிந்த நடிகர் யாஷ், கல்லூரி படிப்பை முடித்த பிறகு நாடகக் குழுவில் இணைந்தார்.

முதலில் மேடை நாடகங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய யாஷ், பின்னர் கன்னட சின்னத்திரை சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

KGF - Yash

அப்படியே வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த யாஷ் துணை நடிகராக அறிமுகமானார். 2008ம் ஆண்டு வெளியான மோகின மனசு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இதுவரை 21 படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு உலகளவில் மெகா ஹிட் அடித்த கே.ஜி.எஃப் படம் நடிகர் யாஷின் திரைத்துறையில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Actor Yash

யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான KGF படத்துக்குக் கன்னட மொழி ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு எனப் பல மாநில ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் யாரும் எதிர்பாராத வகையில், 200 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்தது.

கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டாராக வலம் வரும் நடிகர் யாஷ், KGFபடம் மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமானார். இந்தியாவில் பிற மொழி ஹீரோக்கள் தமிழ் மொழியில் வெற்றி அடைவது என்பது அவ்வளவு சாத்தியமானது அல்ல.

இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

actor Yash

கே.ஜி.எஃப் 2படத்தில், தனது கதாபாத்திரத்தின் பெரும்பாலான வசனங்களை நடிகர் யாஷ் சொந்தமாக எழுதியுள்ளதாக, இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் ஒரே படத்தில் சினிமா உலகில் தனக்கென்று ரசிகர்கள் படையைப் பெற்று பேன் இந்தியன் ஸ்டாராக நடிகர் யாஷ் வளர்ந்துள்ளார்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த யாஷ் இன்று கோடிகளில் சம்பளம் பெற்றாலும் இந்த உயரத்தை அடைய மேற்கொண்ட போராட்டம் வலிகள் நிறைந்தது. ஒரு ஓட்டுநரின் மகன் இன்று பேன் இந்தியன் ஸ்டாராக நடிகர் யாஷ் உயர்ந்துள்ளதை, பல மேடைகளில் இயக்குநர் ராஜமெளலி தொடங்கி, நடிகர் விஷால் வரை புகழ்ந்துத்தள்ளியுள்ளனர். இளைஞர்களின் மத்தியில் நடிகர் யாஷ் ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?