Thalapathy67: ”இது 100% என்னோட படம்” - விஜய் படம் குறித்து லோகி கொடுத்த அப்டேட் Twitter
சினிமா

Thalapathy67: ”இது 100% என்னோட படம்” - விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

Keerthanaa R

தன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனால் ட்விட்டரில் #தளபதி67 டிரெண்டிங்கில் உள்ளது.

சமீபத்தில் தனியார் சேனலுக்கான நேர்காணல் ஒன்றில் தமிழ் சினிமா இயக்குநர்கள் பங்கேற்றனர். இந்த நேர்காணலில் இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ஹலிதா ஷமீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அப்போது, தொகுப்பாளர் தளபதி 67 படம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 ”100 சதவிகிதம் என்னுடைய படம்” எனக் கூறினார்.

மாஸ்டர் திரைப்படத்திற்காக விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தபோது, அதை தவறவிட விரும்பவில்லை என்று குறிப்பிட்டார் லோகேஷ். தயாரிப்பாளரும் ஒரு ஆக்‌ஷன் கமர்ஷியல் படம் எதிர்பார்த்ததாலும், நேரம் குறைவாக இருந்த காரணத்தினாலும், அது 50% விஜய் படமாகவும் 50% லோகேஷ் படமாகவும் அமைந்தது என்றார் இயக்குநர்.

மேலும் மாஸ்டர் குறித்து கூறியவர், ”கமர்ஷியல் சினிமாவில் என்ன வித்தியாசமா கொடுக்க முடியும்னு யோசித்தேன்” என்றார்.

விஜய், கமல் போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பதனால், நல்ல கதையை தயார் செய்ய எனக்கு நேரம் தேவை என என்னால் கேட்க முடிகிறது என்றார்

தளபதி 67ஐ படமாக்க தன்னிடம் தேவையான நேரம் இருப்பதினால், ”இது 100 சதவிகிதம் என்னுடைய படமாக இருக்கும். It's Not Going To Be 50-50" என்று கூறியுள்ளார் இயக்குநர்.

மேலும் லோகேஷ் படத்தில் இயக்குநர் கவுதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதனால் ட்விட்டரில் #Thalapathy67 டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த படம் LCUவின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?