யுவன் சங்கர் ராஜா twitter
சினிமா

Love Today: யுவனை திட்டிய பிரதீப், சான்ஸ் கேட்ட பிரேம்ஜி; இணையத்தில் வைரலாகும் ட்வீட்கள்

அவர் மார்ச் 14, 2010 அன்று பதிவிடப்பட்ட பதிவில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை Waste, fraud எனக் கூறியுள்ளது, காட்டு தீயாக பரவி வருகிறது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், லவ் டுடே படத்திற்கு யுவன் தான் இசையமைத்திருக்கிறார்.

Keerthanaa R

லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் பழைய ஃபேஸ்புக் பதிவுகளில் அவர் கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரை திட்டி பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தன் ஃபேஸ்புக் கணக்கை டெலீட் செய்துள்ளார் பிரதீப்.

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுகொண்டிருக்கிறது லவ் டுடே திரைப்படம். இந்த படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ளார் பிரதீப் பிரதீப் ரங்கநாதன். புகழின் உச்சியில் இருக்கும் பிரதீப் பிரதீப் ரங்கநாதனின் பத்து வருட பழைய பதிவுகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

அவர் மார்ச் 14, 2010 அன்று பதிவிடப்பட்ட பதிவில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை Waste, fraud எனக் கூறியுள்ளது, காட்டு தீயாக பரவி வருகிறது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், லவ் டுடே படத்திற்கு யுவன் தான் இசையமைத்திருக்கிறார். முக்கியமாக அவரது காந்த குரலில் ஒலிக்கும் ‘என்னை விட்டு உயிர் போனாலும்’ பாடல், தற்போது அனைவரும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும் லவ் ஆந்தம்!

இதற்கிடையில் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்களையும் பெற்று வருகிறார் பிரதீப். ஆகஸ்ட் 8, 2010 அன்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கோழை எனக் கூறியுள்ள பதிவும் இதில் சிக்கியுள்ளது. தோனி எப்போதும் ரெய்னாவின் பின்னால் ஒளிந்துக்கொண்டிருக்கிறார் என்றும், அவரது தலைமை சரியில்லை எனவும் அந்த பதிவு குறிப்பிடுகிறது.

மேலும் இந்திய அணி வென்றால் அதற்கு காரணம் அணி வீரர்கள் தானே தவிர, தோனி அணிக்காக ஒன்றும் செய்யவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ரெய்னா, நெஹரா, சச்சின் ஆகியோரும் இந்த பதிவுகளில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுடன் விஜய் நடித்த சுறா படத்தை விமர்சித்து பதிவிட்டிருந்த ட்வீட்டும் இணையத்தில் வைரலானது. பிரதீப் ரங்கநாதன் நடிகர் விஜயிடம் கதை சொல்லியிருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இந்த பதிவுகளால் கடும் விமர்சனத்திற்கு பிரதீப் உள்ளாகியுள்ள நிலையில் தனது ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்துள்ளார் இயக்குநர்.

இந்நிலையில் இயக்குநர் பிரதீப் தன் டிவிட்டர் பக்கத்தில் பதலளித்திருந்தார். அவர் பதிவிட்டதாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நிறைய பதிவுகள் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை எனவும், தன் ஃபேஸ்புக் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அதில் சில பதிவுகள் நிஜமென்றும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவேற்றப்பட்டிருக்கும் பதிவுகள் போலியானவை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

“நான் தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால் நாம் வளர வளர நாம் செய்த தவறுகளை உணர்ந்து, நிறைய கற்றுக்கொள்வோம். நான் என் தவறுகளை சரி செய்ய முயற்சித்திருக்கிறேன். நான் ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக மாறவே முயற்சிக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, பிரதீப் ரங்கநாதனிடம் நடிகர் பிரேம்ஜி தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுள்ள ட்விட்டர் பதிவும் இணையத்தில் வைரலானது. பிரதீப் குறும்படம் எடுத்திருந்தபோது, திரைத்துறையினரிடம், யூடியூப் லின்கை கொடுத்து ரீட்வீட் செய்யுமாறு கேட்ட பதிவுகளும், தற்போது அதே திரையுலகினர் அவரை பாராட்டி வருவதும் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. வளர்ச்சி என்பது இதுதான் எனக் கூறி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?