AR Rahman: இசைப்புயல் இசையில் பாடிய வைகை புயல் - வருகிறது மாமன்னன் முதல் சிங்கிள்! ட்விட்டர்
சினிமா

AR Rahman: இசைப்புயல் இசையில் பாடிய வைகை புயல் - வருகிறது மாமன்னன் முதல் சிங்கிள்!

Keerthanaa R

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் மாமன்னன். இதில் கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையமைக்கிறார். இந்த படம் குறித்த புதியதொரு அப்டேட் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

வருகிற 19ஆம் தேதி மாமன்னன் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை நடிகர் வடிவேலு பாடியிருக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி வரிகள் அமைத்திருக்கிறார். இதனால் இந்த பாடலுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். இதில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முன்பே கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் படக்குழு வெளியிட்ட ஸ்டில்கள் கவனம் ஈர்த்தன.

வடிவேலு கையில் துப்பாக்கியுடன், சீரியஸான ஒரு லுக்கை பார்த்ததும், வழக்கமாக நாம் பார்க்கும் நகைச்சுவை மன்னன் இந்த படத்தில் இருக்கமாட்டார் என்பது தெரியவந்தது.

ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு அளித்திருந்த பேட்டியில், படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படம் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட அரசியலை பேசும் படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

மேலும், படத்தின் கதையை எழுதும்போதே, வடிவேலு சார் மாதிரி ஒருத்தர் இந்த பாத்திரத்தை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததாக கூறினார். ஆனால், அதற்கு சாத்தியக்கூருகளும் குறைவே என நினைத்தவர் கடைசியில் வடிவேலுவிடமே பாத்திரம் சென்றது குறித்தும் பேசியிருந்தார்.

வருகிற மே 19 ஆம் தேதி வடிவேலுவின் குரலில், ஏ ஆர் ரஹ்மானின் இசையில் மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?