Mamannan: வெளியானது மாமன்னன் டிரெய்லர் - வடிவேலு உதயநிதி கூட்டணிக்கு தயாரா?  Twitter
சினிமா

Mamannan: வெளியானது மாமன்னன் டிரெய்லர் - மிரட்டும் வடிவேலு உதயநிதி கூட்டணிக்கு தயாரா?

Keerthanaa R

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்னன் போன்ற வெற்றிப்படங்களை தொடரந்து இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன்

மாரி செல்வராஜ் - மாமன்னன்

இதில் வைகைப் புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்துள்ளது, இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்திருக்கிறார்.

தன் தந்தையின் வடிவமும், தேவர் மகன் படத்தில் வந்த இசக்கி கதாபாத்திரமும் தான் வடிவேலுவின் பாத்திரம் என இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேசியதிலிருந்து எதிர்பார்ப்புகள் இன்னும் கூடுதலாகவே உள்ளன.

இந்நிலையில் இன்று திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என படக்குழு முன்னரே அறிவித்திருந்தது.

டிரெய்லர் வெளியீட்டை ஒட்டி படக்குழு வெளியிட்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?