Naane Varuven Twitter
சினிமா

Naane Varuven : 'வீரா சூரா' வெளியானது தனுஷ் - செல்வா - யுவன் காம்போவின் முதல் பாடல்

Priyadharshini R

மயக்கம் என்ன திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகளுக்குக் கழித்து தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் நானே வருவேன்.

இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

நடிகர் தனுஷ் இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே காதல் கொண்டேன்,மயக்கம் என்ன, புதுப்பேட்டை என 3 வெற்றி படங்களைக் கொடுத்துள்ள நிலையில், நான்காவது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த கூட்டணியின் பலமாக யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். யுவன் - செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பாடல் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.

இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.இந்நிலையில் “நானே வருவேன்” படத்தின் ஒன்லைனை நேற்று தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஒரே ஒரு

ஊருக்குள்ளே,

இரண்டு ராஜா இருந்தாராம்..

ஒரு ராஜா நல்லவராம்,

இன்னொரு ராஜா கெட்டவராம் என்று பதிவிட்டு முக்கிய அப்டேட் இன்று மாலை 4.40 மணிக்கு வெளியாகும் என பதிவிட்டிருந்தார்.

இதன்படி நானே வருவேன் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?