பொன்னியின் செல்வன் ஆ? நானே வருவேன் ஆ?  Twitter
சினிமா

பொன்னியின் செல்வன் ஆ? நானே வருவேன் ஆ? மணிரத்னத்துடன் மோதும் செல்வராகவன்

Keerthanaa R

அடுத்தடுத்த நாட்களில் நானே வருவேன், பொன்னியின் செல்வன் ஆகிய இரு பெரிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் நானே  வருவேன். கிட்டதட்ட 10 வருடங்கள் கழித்து தனுஷ் - செல்வராகவன் கூட்டணி இணைந்துள்ளது. நானே வருவேன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். de ja vu விளைவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

Naane Varuven

இணையத்தில் D vs D என்ற டேக் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

மற்றொரு புறம், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்  செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. கார்த்தி ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இணைந்திருக்கிறது திரைப்படத்தில்.

பொன்னியின் செல்வன்

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு கவிஞர்கள் இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவா அனந்த் மற்றும் கிருத்திகா நெல்சன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். 

இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இரு பாகங்களாக வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன். 

இதற்கிடையில், செல்வராகவன் பத்து வருடங்களுக்கு முன் "என்னால் பொன்னியின் செல்வன் கதையை இயக்கமுடியும்" என்று பதிவிட்டிருந்த ட்வீட் வைரலானது. இதனால் தான் பொன்னியின் செல்வன் வெளியாகும் ஒரு நாளைக்கு முன் நானே வருவேன் வெளியாகிறது என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும், அடுத்தடுத்த நாட்களில் இரு பெரிய படங்கள் வெளியாகவுள்ளதால் இரட்டிப்பு குதூகலத்தில் இருக்கிறது ரசிகர்கள் பட்டாளம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?