Nayanthara - Samantha Twitter
சினிமா

நயன்தாராவை அவமதித்த பாலிவுட் இயக்குநர் - சீறிய ரசிகர்கள் - விரிவான தகவல்கள்

Antony Ajay R

நயன்தாரா தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் நயன்தாராவை எனது பட்டியலில் அவர் பெரிய நடிகை இல்லை எனக் கூறியது சர்ச்சையாகி உள்ளது.

கரண் ஜோகரின் இந்த பேச்சு நயன்தாராவை அவமதிப்பதாக இருக்கிறது என அவரது ரசிகர்கள் டிவிட்டரில் கரண் ஜோகருக்கு எதிராக பதிவுகளை எழுதி வருகின்றனர்.

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகை சமந்தா மற்றும் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சியில் சமந்தா அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா பற்றி கூறியவை ஏற்கெனவே வைரலானது குறிப்பிடத்தக்கது.

சர்சைகள் இல்லாமல் நிறைவடையாது எனுமளவுக்கு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது கரண் ஜோகரின் நிகழ்ச்சி.

அதில் அவர் சமந்தாவிடம் கேட்ட கேள்விக்கு சமந்தா, "நான் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்தேன்" அவர்,"தென்னிந்தியாவின் மிகப் பெரிய நடிகை..." எனக் கூறிக்கொண்டிருக்கும் போது இடை மறித்த கரண், "எனது பட்டியலில் இல்லை" எனக் கூறினார்.

இந்த க்ளிப்கள் இணையத்தில் வைரலானது.

கரண் Ormax Media -வின் பட்டியலைக் குறிப்பிட்டு அவ்வாறு கூறியது நயன் ரசிகர்களைக் கோபமடையச் செய்துள்ளது. கரண் அந்த இடத்தில் அவ்வாறு கூறியது தேவையற்றது எனக் கூறும் ரசிகர்கள், "உங்கள் பட்டியல் அவர் இடம் பெற தகுதியற்றது. அவர் லேடி சூப்பர் ஸ்டார்" என சீறியுள்ளனர்.

நயன்தாரா இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் மிகப் பெரிய நடிகராக இருக்கும் ஷாருக் கானுடன் ஜாவான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?