Celebs who became parent through surrogacy Twitter
சினிமா

நயன்தாரா முதல் சன்னி லியோன் வரை : வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்

Priyadharshini R

பாலிவுட்டில் பல ஆண்டுகளாக வாடகைத் தாய் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில், தற்போது கோலிவுட்டிலும் அது பரவியுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தங்களின் இரட்டை குழந்தை குறித்து அறிவித்ததிலிருந்து இணையத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாடகைத் தாய்க்கு ஏற்பாடு செய்து குழந்தையைப் பெற விரும்பும் தம்பதியர் அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப் பெறத் தகுதியற்றவர்களாக இருக்கும் பட்சத்தில், திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகே வாடகைத் தாயை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.

அப்படி இருக்கையில் சட்ட நடைமுறைகளை பின்பற்றியே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வாடகைத் தாய்மை அதிகரித்து வருகிறது. இவ்வாறு குழந்தை பெற்ற திரையுலக நட்சத்திரங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

அமீர்கான்-கிரண் ராவ்

பாலிவுட் நட்சத்திர ஜோடி அமீர்கான்-கிரண் ராவ் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர்.

இவர்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் வாடகைத் தாய் மூலமாக பிறந்தார்.

ஷாருக்கான் - கௌரி கான்

ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் 2013 இல் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தனர். அவர் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம் கான்

சன்னி லியோன் - டேனியல் வைபர்

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார்.

சன்னி லியோன் - டேனியல் வைபர் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தையை தானே பெற்றெடுத்த ஷில்பா ஷெட்டி, வாடகைத் தாய் மூலம் இரண்டாவது குழந்தையைப் பெற்றுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஷில்பா ஷெட்டிக்கு சமிஷா என்கிற மகள் வாடகை தாய் மூலம் பிறந்தார்.

பிரீத்தி ஜிந்தா

பிரபல நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தாவும் கடந்த 2021-ம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர்கள் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டார்கள்.

Nayanthara and Vignesh Shivan have twins

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

பாலிவுட்டில் பல ஆண்டுகளாக வாடகைத் தாய் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில், தற்போது கோலிவுட்டிலும் அது பரவியுள்ளது. வாடகை தாய் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?