Thalaivar169 Twitter
சினிமா

Thalaivar169 : ரஜினியுடன் இணைவது உறுதி - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்

பீஸ்ட் வெளியீட்டுக்குப் பின்னர் அனைத்துமே தலை கீழாக மாறியது. விஜயை சரியாகப் பயன்படுத்தவில்லை என நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளைக் குவிக்கக் கொஞ்சம் மனம் தளர்ந்தார் நெல்சன்

Antony Ajay R

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் - விஜய் கூட்டணியில் கடந்த வாரம் ரிலீஸாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது பீஸ்ட் திரைப்படம். இந்த திரைப்படம் திரையரங்குகளில் சரிவர ஓடாத நிலையில் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துவதாக அமைந்தது.

பீஸ்ட் படத்தின் விடுதலைகளுக்கு முன்னரே சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பு, அனிரூத் இசை என எல்லாமே சரிவர அமைந்து அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்கள் நெல்சன் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வேற லெவல் ஹைப் கொடுத்திருந்தது.

ஆனால் பீஸ்ட் வெளியீட்டுக்குப் பின்னர் அனைத்துமே தலை கீழாக மாறியது. விஜயை சரியாகப் பயன்படுத்தவில்லை என நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளைக் குவிக்கக் கொஞ்சம் மனம் தளர்ந்தார் நெல்சன்

Beast

பீஸ்ட் தடுமாற்றத்துடன் கேஜிஎஃப் வெற்றியையும் ஒப்பிட்டு பீஸ்ட் இயக்குநர் நெல்சனை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஒரு கட்டத்தில் தலைவர் 169 படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டன.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே விஜய் நெல்சனிடம் ரஜினிகாந்த்துக்குக் கதை சொல்லச் சொல்லியதாக நெல்சன் கூறியிருந்தார். ஏற்கெனவே இதே போல அஜித் நடித்த விஸ்வாசம் பட இயக்குநர் சிவா உடன் இணைந்து ரஜினி அண்ணாத்த படத்தில் அதிக நெகட்டிவ் ரிவியூக்களைப் பெற்றார். இதனால் ரஜினி நெல்சனுடன் இணைந்து படமெடுக்க வேண்டாம் என ரஜினி முடிவு செய்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டன.


பல சர்ச்சைகளை, வதந்திகளைக் கடந்து தலைவர் 169ல் இணைவதை உறுதி செய்திருக்கிறார் நெல்சன். அவரது ட்விட்டர் பக்கத்தில் தலைவர்169 ஹேஷ்டெக்கை இணைத்து இதனை வெளியுலகிற்குத் தெரிவித்திருக்கிறார்.


முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?