வெந்து தணிந்தது காடு: "நல்லா தூங்கிட்டு வாங்க"- கௌதம் மேனனை வச்சு செய்த நெட்டிசன்கள் Twitter
சினிமா

வெந்து தணிந்தது காடு: "நல்லா தூங்கிட்டு வாங்க"- ஏன் ப்ரோ? நெட்டிசன்களின் நக்கல் ட்வீட்

Antony Ajay R

வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. சிம்புவின் மாநாடு வெற்றிக்குப் பிறகு இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காலை 5 மணிக்கு இந்த படம் பார்க்க வருபவர்கள் நன்றாக தூங்கிவிட்டு வாருங்கள். படம் செட்டாக கொஞ்சம் நேரமெடுக்கும் என அவர் கூறியிருந்தார்.

பொதுவாக தூக்கத்தில் இருப்பவர்களைக் கூட விழித்துப் பார்க்க வைக்கும் படம் என்று தான் விளம்பரம் செய்வார்கள். ஜிவிஎம்-ன் இந்த மாறுபட்ட யுக்தி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தின் ரன் டைம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாட்களில் விறுவிறுப்பான திரைக்கதை இல்லாத படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக தியேட்டரில் நன்றாக ஓடிய ஆக்‌ஷன் படமான விக்ரம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்திருந்தது.

ரசிகர்கள் அந்த விறுவிறுப்பை இழந்தால் வெந்து தணிந்தது காடு வெற்றி பெறுவது கடினமான ஒன்றுதான். எனினும் இயக்குநர் கௌதமின் முந்தையப் படங்கள் அதிக ரன் டைம் கொண்டிருந்தன என்பதை எடுத்துக்காட்டுகின்றனர் ரசிகர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?