Pisaasu2 Twitter
சினிமா

பிசாசு 2 : தேசிய கொடி தீமில் வெளியான படத்தின் புதிய போஸ்டர்

Priyadharshini R

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் பிசாசு. வழக்கமாகப் படைக்கப்படும் பேய் படங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தோடு நகர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த படம் தான் பிசாசு.

இதனையடுத்து அதன் 2 பாகத்தை 8 ஆண்டுகளுக்குப் பின் மிஷ்கின் எடுத்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் பிசாசு 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஆண்ட்ரியா கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு அமர்ந்துள்ளார். இந்த புதிய போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் தேசியக் கொடி தீமில் வெளியாகி இருப்பதாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில் செக்க சிவந்த வானத்தின் பேக்கிரவுண்டில் ஊதா நிற ஆடை அணிந்து பச்சை நிற புல்வெளி மேல் ஆண்ட்ரியா அமர்ந்துள்ளார். இதனைப் பார்த்து தேசியக் கொடி தீமில் போஸ்டர் வெளியாகி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலே சுதந்திர தின வாழ்த்துகளையும் படக்குழு தெரிவித்துள்ளது. பிசாசு 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?