Vikram Stills Twitter
சினிமா

விக்ரம் : டிரெண்டாகும் 'சக்கு சக்கு வத்திகுச்சி'கு ஹாரிஸ் தான் Programmer!

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'சக்கு சக்கு வத்திக்குச்சி' பாடலை திட்டமிட்டது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான். பாடல் வைரலான நிலையில், ஹாரிஸ் அதை தன் ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி

Keerthanaa R

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம், தமிழ் நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது. விக்ரமில், நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கைதி படத்திலும் சரி, விக்ரமிலும் சரி, காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கப்பட்ட பழைய பாடல்களுக்குத் தான் மவுசு அதிகமாகியிருக்கிறது.

Vikram Stills

ஜூன் 3 ஆம் தேதி, கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்தது விக்ரம் திரைப்படம். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்க, முதலில் பத்தல பத்தல பாடல் வெளியானது. அரசியல் சார்ந்த வரிகளுக்காக சில எதிர்ப்புகளை இப்பாடல் எதிர்கொண்டாலும், பல வருடங்களுக்குப் பிறகு, கமலுக்கு ஒரு ஹீரொ இன்ட்ரோ சாங், அதிலும் கமலின் வேற லெவல் குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது


அதன் பிறகு அனிருத் பாடிய போர்கொண்ட சிங்கம் பாடல் வெளியானது. ஒரு ஹீரொ இன்ட்ரோ சாங், மற்றும் ஒரு மெலடியுடன் நிறுத்திக்கொண்டார் இயக்குநர். கைதி திரைப்படம் வந்த போது, தனக்குத் திரைப்படத்தில் பாடல்கள் வைப்பதில் பெரிதும் ஆர்வமில்லை என்று குறிப்பிட்டிருந்தார் லோகேஷ். கைதி படத்தில் பாடல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj-Kamal

மாநகரம் படத்திலும் தனியாகப் பாடல் காட்சி இல்லை. கதையோடு ஒன்றி, பின்னணியில் தான் இசைக்கும். எல்லோருக்கும் படத்தில் இடம்பெற்ற, அல்லது இடம்பெறாமல் தனியாக பிறகு வெளிவரும் பாடல்கள் பிடித்திருக்கும். ஆனால் லோகேஷ் கனகராஜின் யுனிவெர்ஸ் தனி. இவர் படத்தில் பின்னணியில் இவர் பயன்படுத்தும் பழைய பாடல் தான் எல்லாருக்கும் ஃபேவரெட்.


ஆம், கைதியிலும் சரி, விக்ரமிலும் சரி, கதையின் மிக முக்கியக்கட்டத்தில் இரண்டு பழைய பாடல்கள் ஒலிக்கும். இவ்விரண்டு படமும் வெளியான பிறகு அந்த இரண்டு பாடல்களும் மீண்டும் மக்கள் அதிகமாக முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.

கைதி படத்தில், காவல் நிலையத்தை சுற்றிவளைத்த அடைக்கலத்தின் ஆட்களுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடப்பது கேட்கக்கூடாது என்று கல்லூரி மாணவர்கள் லவுட் ஸ்பீக்கரில் முதலில் "ஜும்பலக்கா ஜும்பலக்கா" பாடல் ஒலிக்கும். பின்னர் அடைக்கலத்தின் தம்பி அன்பு, காவல் நிலையத்திற்குள் நுழைந்ததும் ஒலிப்பது மறுபடியும் படத்தில் வரும் "ஆசை அதிகம் வச்சு". கைதி வெளிவந்த போது இதற்கு வைப் செய்யாத ஆள் இல்லை.


இதை தொடர்ந்து இப்போது கமலின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற "சக்கு சக்கு வத்திக்குச்சி" பாடல் தான் டிரெண்டிங். படத்தின் ஆரம்பத்தில் கமலுக்காக காத்திருக்கையில் ஒரு காரில் ஒலிக்கும் சக்கு சக்கு பாடல், பின்னர் second half ல் ஒரு முறையும் ஒலிக்கும்.

படம் பார்த்தவர்களில் பலர் இது என்ன பாடல் என்று மண்டையை பிய்த்துக்கொள்ள, அது அருண் பாண்டியன் நடிப்பில் 1995ல் வெளியான அசுரன் திரைப்படத்தில் வரும் பாட்டு. இந்த படத்திற்கு ஆதித்யன் இசையமைத்திருக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இதற்கு Programming செய்துள்ளார்.

பாடல் இந்த நான்கு நாட்களாக வைரலாகி வரும் நிலையில், இதை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார் ஹாரிஸ்.

இந்த பாடல் திரும்பத் திரும்ப மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், இப்படிப் பட்ட ஒரு பாடலை, இந்த தலைமுறைக்கு டிஸ்கவர் செய்து கொடுத்த இயக்குநருக்குக் குவிகிறது பாராட்டு. விக்ரம் படம் மூலம், வித விதமாக வந்து சேர்ந்துகொண்டிருக்கிறது லோகெஷுக்கு புகழ்.

இதைத் தவிற கல்வியா செல்வமா வீரமா பாடலும் ஒரு முறை வரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?