Blue Sattai Maran vs GVM Twitter
சினிமா

Blue Sattai Maran vs GVM : வெந்து தணிந்தது காடு விமர்சனத்தால் எழுந்த சண்டை

Antony Ajay R

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்கு அளித்த விமர்சனம் பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

பொதுவாகவே ப்ளூ சட்டை மாறன் நகைச்சுவையாக விமர்சனம் செய்வார். ஆனால், அது படக்குழுவினரை தாக்கிப் பேசும் விதமாக இருக்கும்.

இதனால் அவரது விமர்சனங்களை ரசிப்பவர்களும் வெறுப்பவர்களும் உள்ளனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் "ப்ளூ சட்டை மாறன் ரிவியூ கடுப்பா இருக்குது" எனப் பேசியிருந்தார்.

Blue Sattai Maaran Vendhu Thanindhathu Kaadu Review:

இந்த ரிவியூ படத்தில் பணியாற்றியவர்களை இகழும் வண்ணம் இருப்பதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

"அவருடைய யூடியூப் சேனலுக்கு ஸ்பான்சர்கள் வரவேண்டும் என்பதற்காக ஒரு படத்தை இழக்காரமாக அணுகக் கூடாது. திருச்சிற்றம்பலம் ரிவியூ கூட முதல் 10 நிமிடம் அந்த படத்தை கழுவி ஊற்றுவதாக தானிருக்கும். படம் நல்லா இருக்குன்னு பாதிக்கு மேல லேச சொல்வார். அவரப்பத்தி பேசணும்னு சொல்லல, இறங்கி எதாவது செய்யணும்னு தோனுது" எனப் பேசியிருக்கிறார் கௌதம்.

வெந்து தணிந்தது காடு படத்தை முன்னெப்போதுமில்லாத வண்ணம் புதுமையாக முயற்சித்திருந்தார் இயக்குநர். பொதுவாக அவர் படங்களில் இருக்கும் வாய்ஸ் ஓவர் இல்லாமல், ஜெயமோகனின் கதையுடன் களமிறங்கியிருந்தார். படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

ஜிவிஎம்மின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரை பல வழிகளில் விமர்சித்து வருகிறார் ப்ளூசட்டை மாறன். குறிப்பாக அவர் சாதிப் பெயரை பின்னொட்டாக வைத்திருக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

இதே போல நடிகர் சிம்பு, "இந்த படத்தில் யாரும் என் உடலை கேலி செய்ய முடியாது. நான் யாருக்கு சொல்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியும். ஒருவரின் உடலை வைத்து கேலி செய்வது மிகத் தவறான ஒன்று" என பட விழா ஒன்றில் பேசியிருந்தார்.

அவர் ப்ளூ சட்டை மாறனைக் குறிப்பிட்டே இப்படிப் பேசியதாக கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் சிம்புவின் உடல் எடை அதிகமாக இருந்த போது விமர்சனங்களில் அதனை கிண்டல் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

முன்னதாக சிம்புவுக்கு எதிராகவும் சில ட்வீட்களை செய்திருந்தார் மாறன்,

ப்ளூ சட்டை மாறன் மற்றும் ஜிவிஎம் விவகாரம் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து ட்விட்டர் வாசிகளின் ரியாக்‌ஷன்களைக் காணலாம்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?