Emilia Jones CODA
சினிமா

Oscar 2022 : CODA, DUNE, Encanto - ஆஸ்கரில் கவனம் ஈர்த்த படங்கள், விருதுப் பட்டியல்

Antony Ajay R

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கோலாகலமாக நடைபெற்ற விழாவில் விருதுகளை தட்டிச் சென்ற படங்கள் மற்றும் கலைஞர்கள் பட்டியல் இதோ…



சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (திரைப்படம் - கிங் ரிச்சர்ட்)

சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)

சிறந்த திரைப்படம் - கோடா

சிறந்த இயக்குனர் - ஜென் ஷாம்பியன் (திரைப்படம் - தி பவர் ஆஃப் டாக் )

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

சிறந்த படத்தொகுப்பு - ஜோ வாக்கர் (திரைப்படம் - டுன்)

சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் (திரைப்படம் - வெஸ்ட் சைட் ஸ்டோரி)

சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (திரைப்படம் - கோடா)

சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர் (திரைப்படம்- கோடா )

சிறந்த திரைக்கதை - சர் கென்னித் ப்ரானா (திரைப்படம் - பில்ஃபெஸ்ட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜென்னி பீவன் (திரைப்படம் - க்ரூயெல்லா)

சிறந்த சர்வதேச திரைப்படம் - டிரைவ் மை கார்

சிறந்த ஆவணப்படம் - சம்மர் ஆஃப் சோல்

சிறந்த பின்னணி பாடல் - நோ டைம் டூ டை (பில்லி ஐலிஷ் மற்றும் ஃபினியஸ் ஒ'கனல்)

சிறந்த பின்னணி இசை - ஹன்ஸ் ஸிம்மர் (திரைப்படம் - டுன்)

சிறந்த ஒளிப்பதிவு - க்ரெக் ஃப்ராசர் (திரைப்படம் - டுன்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டுன்

சிறந்த சவுண்ட் - டுன்சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டுன்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - தி லாங் குட்பை

சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி விண்ட்ஷில்ட் வெப்பர்

சிறந்த ஆவண குறும்படம் - தி குயின் ஆஃப் பாஸ்கெட்பால்

Dune

இந்த பட்டியலில், டெனி வில்நௌ (Denis Villeneuve) இயக்கிய சயின்ஸ் பிக்ஷன் படமான 'Dune' ஆறு விருதுகளை அள்ளியிருப்பது கவனிக்க வைக்கிறது. இந்த படம் மொத்தமாக 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு என ஆறு விருதுகளை `Dune' படம் பெற்றிருக்கிறது.

10191-ம் ஆண்டு... கிரகணாதி கிரகணங்களுக்கு அப்பால் ஓர் உலகம் இயங்குகிறது. மீட்பர் வருவார் எனக் காத்துக்கொண்டிருக்கிறது ஓர் இனம். அவர்கள் யார், அவர்களுக்கு நடக்கும் துயரங்கள் என்ன, அந்தக் கிரகத்தின் சிறப்பு என்ன, இந்தப் பிரபஞ்சத்தின் எந்தத்துளியில், துகளில் இந்த மக்கள் சங்கமிக்கிறார்கள் என கதை, சூழல், கதைமாந்தர்கள் பற்றிய அறிமுகத்தைத் தந்து செல்கிறது டெனி வில்நௌ (Denis Villeneuve) இயக்கியிருக்கும் இந்த 'டியூன்' (DUNE) முதல் பாகம்.

டியூனே நாவலை அதன் பிரம்மாண்டமும் அரசியலும் அச்சு பிசராமல் படமாக்கியிருப்பது படக்குழுவின் சாதனை என்றே சொல்லலாம்.

Encanto

அடுத்ததாகச் சிறந்த அனிமேஷன் ஃபியூச்சர் படமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் “என்காண்டோ”. டிஸ்னி தயாரிப்பான இந்த படத்தில், மேஜிக்கல் சக்திகள் உள்ள அதிசயக் குடும்பத்தில் அதியமாகச் சக்திகள் இல்லாத குழந்தையாகப் பிறப்பால் மீராபெல் இதனால் அவள் பல அவமானங்களையும் விரக்தியையும் அடைகிறாள். கதையில் என்காண்டோவுக்கு ஏற்படப்போகும் அழிவு மீராபெல்லுக்கு முன்பே தெரியவரச் சாதாரண பெண்ணான அவள் எப்படி என்காண்டோவைக் காப்பாற்றுகிறாள் என்பதே மீதிக்கதை. குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது

ariana debose


அடுத்தது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் CODA, ஒரு காது கேளாத குடும்பத்தின் ஒரே ஒரு காது கேட்கும் நபராக இருக்கிறார் ரூபி. 17 வயது பெண்ணான அவர் குடும்பத்துக்கு உதவ கல்லூரி செல்வதற்கும் முன் வேலைக்குச் செல்ல தொடங்குகிறாள். கல்லூரியில் உள்ள மியூசிக் பேண்டில் சேர்ந்து இசை தொடர்பான தனது கனவை கண்டடையும் கதையை மியூசிக்கல் ட்ராமாவாக செதுக்கியிருக்கின்றனர் படக் குழுவினர்.

வில் ஸ்மித் இம்முறை தான் முதன்முதலாக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். குயர் பாலின நடிகையான அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?