'Pathaan' Box Office Day 2 Collection: Shah Rukh Khan's Film Collects Rs. 70 Cr In Hindi Twitter
சினிமா

Pathaan Box Office: பாலிவுட்டை தூக்கி நிறுத்திய ஷாருக்கான் - பதான் படம் படைத்த 7 சாதனைகள்

Priyadharshini R

சித்தார்த் ஆனந்த் இயக்கிய 'பதான்' படம் வெளியான இரண்டாவது நாளில் சுமார் ரூ. 70 கோடி வசூலித்துள்ளது.

இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சல்மான் கானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் பாலிவுட்டில் இந்த படம் பல சாதனைகள் படைத்துள்ளது.

பதான் படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 57 கோடியை வசூலித்து பாலிவுட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.

2வது நாள், குடியரசு தின விடுமுறையில் ₹100 கோடியைத் தாண்டியது. பாய்காட்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாக படகுழுவினருக்கு பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பதான் படம் படைத்த சாதனைகள்

இந்தியாவிலிருந்து வெளியான இந்தி படங்களில் உலக அளவில் அதிக அளவு ஸ்க்ரீன்களில் வெளியான திரைப்படம் என்று பெருமையை பதான் பெற்றுள்ளது

இதுவரை வெளியான இந்தி மொழி படங்களில் அதிக வசூலை ஓரே நாளில் ஈட்டிய பெருமை பெற்றுள்ளது (ரூ.106 கோடி)

விடுமுறை தினம் இல்லாமல் வார நாட்களிக் வெளியாகி முதல் நாளில் அதிக கலெக்ஷன் செய்த படம் என்ற சாதனை படைத்துள்ளது.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இன் தயாரிப்பில் இருந்து வெளியாகி முதல் நாளில் 50 கோடி ரூபாய்க்கும் கூடுதலான வசூலை பெற்ற மூன்றாவது படம் இதுவாகும்.

இதற்கு முன்னர் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ”வார்” படத்தின் முதல் நாளில் 53.35 கோடி ரூபாயும் ”தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்” 52.25 கோடியும் வசூலித்திருக்கிறது

ஷாருக்கான் படங்களில் இந்த படம் தான் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம்

அதேபோல் தீபிகா படுகோன், யாஷ் ராஜ், சித்தார்த் ஆனந்த் ஆகியோருக்கு இந்த படம் ரெக்கார்ட் பிரேக்கிங்க் ஆக அமைந்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?