Ponniyin Selvan box office Twitter
சினிமா

Ponniyin Selvan box office: வலிமை, பீஸ்ட்-க்கு டஃப் கொடுத்த PS1 - முதல்நாள் வசூல் எவ்வளவு?

Priyadharshini R

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்.

கல்கியின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சோழர் ராஜ்ஜியத்தின் வரலாற்றைத் திரையில் எடுத்துக் காட்டும் படமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மூவி டிராக்கர் ரமேஷ் பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் முதல் நாளின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து தெரிவித்துள்ளார்.

அதில் பாக்ஸ் ஆபிஸில் பொன்னியின் செல்வன் பாகம் 1-க்கு நல்ல வரவேற்பு உள்ளது, இந்த ஆண்டின் 3வது சிறந்த ஓபனிங் திரைப்படம் என்று கூறியிருந்தார்.

அதாவது

வலிமை- ₹36.17cr

பீஸ்ட்- ₹26.40cr

பொன்னியின் செல்வன் பாகம் 1- ₹25.86cr என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளாக பொன்னியின் செல்வனை படமாக்க முயற்சித்து வந்தனர்.

மணி ரத்னம் இயக்கத்தில் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?