தேவராளன் ஆட்டம் Twitter
சினிமா

பொன்னியின் செல்வன் - தேவராளன் ஆட்டம் : இந்த குரவைக் கூத்து பாடலின் வரிகள் தெரியுமா?

பொன்னியின் செல்வனில் தேவராளன் ஆட்டம் பாடல் தனித்துவமாக இருந்தது. தேவராளன் என்றால் தெய்வீக சக்திகளைக் கொண்டவன் என்று பொருள். படத்தில் குரவைக் கூத்து நடக்கும் காட்சியில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கும்.

Antony Ajay R

பொன்னியின் செல்வன் நாவல் பிரமாண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது பாடல்கள் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இந்த ஆல்பத்தில் வந்த தேவராளன் ஆட்டம் பாடல் ததனித்துவம் பெற்றது.தேவராளன் என்றால் தெய்வீக சக்திகளைக் கொண்டவன் என்று பொருள். படத்தில் குரவைக் கூத்து நடக்கும் காட்சியில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கும். நாவலிலும் இந்த குரவைக் கூத்துப் காட்சிக்கு ரசிகர்கள் உண்டு.

குரவைக் கூத்து என்றால் என்ன?

குரவைக் கூத்து, துடிக் கூத்து, குடக்கூத்து, வரிக் கூத்து எனப் பலவகைக் கூத்துகள் தமிழ் மரபில் காணப்படுகின்றன. இதில் முக்கியமான ஒன்று குரவைக் கூத்து. பொழுது போக்காக தொடங்கிய குரவைக் கூத்து போர் காலங்களில் அல்லது ஏதேனும் அபாயங்கள் மக்களை சூழும் காலத்தில் ஆடப்பட்டது.

குரவைக் கூத்துக்கு தெற்றியாடல், அபிதான சிந்தாமணி, தண்குரவை என்ற பெயர்களும் உள்ளன. தண் குரவை என்பது எந்த அபாயங்களும் இல்லாத நேரத்தில் அமைதியாக ஆடுவதாகும்.

ஆடவரும் பெண்டிரும் ஒருவரை ஒருவர் தழுவி ஆடுவதனால் இதனை தழூஉ என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கூத்தாடும் போது இணைகள் மாறிக்கொண்டே போவதனால் இதனை 'பல் பிணைத் தழீஇ' என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது.

புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களிலும் குரவைக் கூத்து பற்றிய குறிப்புகள் உள்ளன. இப்போதைய தேவராளன் ஆட்டத்துக்கு இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியிருக்கிறார்.

தேவராளன் ஆட்டம் வரிகள்

டம் டம் டம் டம் டம் டமரேடம் டம் டம் டம் டம் டமரேடம் டமடம் டம் டமரே

செக் செக் செக் செக் செக்செக் செக் செக் செக் செக்செக் செக் செக செகபணசெக் செக் செக செகபணசெக் செக் செக் செக் செக்செக் செக் செக செகபணபொட் பொட் பொட் பொட்பொட் பொட் பொட் பொட்பொட் பொட் பொட் பொட்பட் பட் பட் பட் பட் பட்பட் பட் பட் பட் பட் பட்பட் பட் பட் படவெனபட் பட் பட் படவெனபட் பட் பட் படவெனபட் பட் பட் படவென

ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே

டம் டம் டம் டம் டம் டமரேடம் டம் டம் டம் டம் டமரேடம் டமடம் டம் டமரே

சூடானது சூடானது சூடானது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் போராடுது போராடுது போராடுது சித்தம் தீராதது தீராதது தீராதது வெறிச்சத்தம் (ரத்தம்!)

சூடானது சூடானது சூடானது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் போராடுது போராடுது போராடுது சித்தம் தீராதது தீராதது தீராதது வெறிச்சத்தம் (ரத்தம்!)

கொத்துப்பறை கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு கொட்ட பகை கொட்ட பகை கொட்ட பகை வெட்டு துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு

செறுவேட்டலை பேசிடுதே, மனுக்கேட்டுனை ஓதிடுதே ஒரு தாட்சிணி தீயுடனே, அதை ஆற்றிடவா பேயனே

டம் டம் டம் டம் டம் டமரே(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)டம் டம் டம் டம் டம் டமரே(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)டம் டமடம் டம் டமரே(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)

செறுவேட்டலை பேசிடுதே, மனுக்கேட்டுனை ஓதிடுதே ஒரு தாட்சிணி தீயுடனே, அதை ஆற்றிடவா பேயனே

டும் டும் டும் டும் டும் டும்டும் டும் டும் டும் டும் டும்டும் டும் டும் (டுகு டுகு டுகு)டும் டும் டும் டும் டும் டும்டும் டும் டும் (டுகு டுகு டுகு)

செங்குருதி சேயோனே, வங்கொடிய வேலோனே (டுகு டுகு டுகு) செவ்வலறி தோளோனே, என் குடிய காப்போனே [டும் டும் டும் (டுகு டுகு டுகு)]

கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருதா துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய்! டும் டும் டும் (டுகு டுகு டுகு)

மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா? ஒப்புகழி தாங்கிடுமா? கைகளும் ஓங்கிடுமா?

வருண்டா கோடடா எடுடாவருவாய் தருவாய் உடனேசெக செக செக செகவெனசெந்நிற குருதியை கொட்டு!

வருண்டா கோடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு!

மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா? ஒப்புகழி தாங்கிடுமா? கைகளும் ஓங்கிடுமா?

கொட்டுப்பறை கோட்டெழுந்திட சுட்டுப்பகை கெட்டழிந்திட கொச்சக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுட்ட பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் குடி கேட்டாள் பூதவிரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு

கொட்டுப்பறை கோட்டெழுந்திட சுட்டுப்பகை கெட்டழிந்திட கொச்சக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுட்ட பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் குடி கேட்டாள் பூதவி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு...

பலிகொடு! [பலிகொடு பலிகொடு பலிகொடுபலிகொடு பலிகொடு பலிகொடுபலிகொடு பலிகொடு பலிகொடு...]

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?