Raiza Wilson: கண்ணீருடன் இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்த நடிகை - என்ன நடந்தது? Instagram
சினிமா

Raiza Wilson: கண்ணீருடன் இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்த நடிகை - என்ன நடந்தது?

Keerthanaa R

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம், ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் முதல் சீசனில் போட்டியாளராக வந்திருந்தார் ரைசா வில்சன். பிக் பாஸ் முடிந்த பிறகு, அதே சீசனில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ’பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்

அதன் பிறகு, பெரிதாக பட வாய்ப்புகள் அவர் பக்கம் வராமல் இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு FIR, காபி வித் காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் காஸ்மெடிக் சர்ஜரி மேற்கொண்டதால், ரைசாவின் முகம் வீங்கிபோயிருந்தது. இச்சம்பவம் பெரிதும் பேசப்பட்டது. பின்னர் அதிலிருந்து மீண்டு வந்திருந்தார் ரைசா.

திரும்பவும் படங்களில், விளம்பரங்களில் நடித்துவந்தவர், மாடலிங்கும் செய்துவந்தார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது

சூரியனின் புகைப்படம் ஒன்றையும், அதனை தொடர்ந்து அவர் அழுதுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்திருந்தார் ரைசா. கேப்ஷனில், ”இது எளிதல்ல, நீ தனியாக இல்லை. நாம் எல்லோரும், அனைத்தையும் படிப்படியாக கற்றுக்கொண்டு வருகிறோம்” என்று எழுதியிருந்தார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகை மஞ்சிமா மோகன், ரைசாவுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஆறுதல் செய்திகளை கமெண்ட் செய்திருந்தனர். தவிர ரசிகர்கள் சிலரும் நடிகைக்கு ஆறுதல் கூறும் விதமாக கமெண்ட் செய்திருந்தனர்.

ரைசா ஒரு வேளை மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், அவர் இந்த பதிவை வெளியிட என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை.

புகழுக்கும், சந்தோஷமான வாழ்விற்கும் சம்பந்தம் இல்லை என இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு அவ்வப்போது நினைவுப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?