Jailer: வெளியானது Trailer - டைகர் முத்துவேல் பாண்டியனாக மிரட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி! twitter
சினிமா

Rajinikanth: இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர் தானா? உண்மை என்ன?

Keerthanaa R

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது சம்பளம் ரூ.210 கோடி என்றும் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படத்திற்கு பின், இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் ரஜினி படம் இது. இதனால் ரசிகர்கள் பேர் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புகளை திரைப்படம் ஈடு செய்தது என்றே சொல்லலாம். இந்தியாவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல், உலகளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ஜெயிலர்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த தகவல்கள் சில கசிந்துள்ளன.

அதன்படி, அவரது சம்பளம் இந்த திரைப்படத்திற்கு பிறகு ரூ.210 கோடி. ஜெயிலர் திரைப்படத்தின் சம்பளமாக ரூ.110 கோடி வாங்கியுள்ளார் ரஜினிகாந்த். தற்போது ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்திற்கு காசோலை வழங்கியுள்ளார்.

அதன் மதிப்பு ரூ.100 கோடி என்று திரைப்பட வணிக ஆய்வாளர் மனோபாலா விஜய்குமார் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மொத்தத்தில் நடிகரின் சம்பளம் ரூ.210 கோடி என்றும் இதுவே இந்தியாவில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நடிகரின் தரப்பு இது பற்றி எந்தவித தகவலும் அளிக்கவில்லை

ஜெயிலர் திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வில்லன் நடிகர் விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் 4 வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதை தவிர ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு பிஎம்டபுள்யூ X7 காரையும் பரிசளித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?