Rajinikanth Twitter
சினிமா

ரஜினிகாந்த்: "அனுமதியில்லாமல் என் பெயரை பயன்படுத்தினால்" சூப்பர்ஸ்டார் விடுத்த நோட்டீஸ்!

Keerthanaa R

இனி அனுமதியில்லாமல், நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் ரஜினியின் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியா அடையாளம் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டர் ஆக இருந்தவர், திரைத்துறையில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக உருவெடுத்தார்.

இவரது உடைந்த தமிழ் உச்சரிப்பு, தனித்துவமான உடல்மொழி, வேகம் ஆகியவை வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. ஆக்ஷன், காமெடி, எமோஷனல் படங்கள் என இவர் நடிப்பில் காண்பித்த வெர்சட்டைல் குணத்தால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என இவர் அறியப்பட்டார்.

இன்றிருக்கும் பல ஹீரோக்கள், வில்லன்கள், காமெடி நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவருக்குமே சினிமா ஆசையை தூண்டிவிட்டவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்தி உள்பட மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அங்கும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில், இனி தன் பெயரையோ, புகைப்படங்களையோ அல்லது குரலையோ, முறையாக தன்னிடம் அனுமதி பெறாமல் யாரேனும் பயன்படுத்துவது தெரியவந்தால், அவர்கள் மீது உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டாரின் சார்பில், அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல்வேறு தளங்களில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்துகின்றன.

தங்களின் புகழுக்காக இவர்கள் இவ்வாறு செய்வதால், பல சமயங்களின் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகிறது

இதனால் ரஜினியுடைய பெயர், புகைப்படம், குரலை ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?