ranveer singh twitter
சினிமா

ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியின் புதிய வீடு - விலை என்ன தெரியுமா?

NewsSense Editorial Team

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாந்த்ரா புறநகர்ப் பகுதியில் கடல் நோக்கிய குவாட்ரப்ளக்ஸ் குடியிருப்பை ரூ. 119 கோடிக்கு வாங்கியிருப்பதாகச் செய்தி வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவே நாட்டின் மிகப்பெரிய குடியிருப்பு அபார்ட்மெண்ட் என்று கூறப்படுகிறது.

சாகர் ரேஷம் என்றழைக்கப்படும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய நான்கு தளங்களை நடிகர் ரன்வீர் சிங் வாங்கியுள்ளார். இது ஷாருக்கானின் பங்களாவான 'மன்னட்' மற்றும் நடிகர் சல்மான் கானின் ’கேலக்ஸி’ அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு அருகில் உள்ள குடியிருப்பாகும்.

Oh Five Oh Media Works LLP என்ற நிறுவனத்தின் பெயரில் அந்த நான்கு தளங்களும் வாங்கப்பட்டிருக்கின்றன. நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அவரது தந்தை ஜக்ஜீத் பவ்னானி ஆகிய இருவரும் தான் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், 11,266 சதுர அடி இடம், பிரத்யேக 1,300 சதுர அடி மொட்டை மாடி மற்றும் 19 வாகன நிறுத்துமிடங்கள் கொண்ட ஒரு குடியிருப்பை வாங்குவதற்கான பரிவர்த்தனைக்கு 7 கோடி ரூபாய்க்கு மேல் முத்திரை வரி செலுத்தப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்படி பார்த்தால் ஒரு சதுர அடியின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய் ஆகும்.

தற்போது, இந்த குவார்ட்ராப்ளெக்ஸ் குடியிருப்பு, ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனெ தம்பதியரின் முதன்மையான இல்லமாக மாற்றும் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?