Akshay Kumar Twitter
சினிமா

சாம்ராட் பிருத்விராஜ்: கங்கனா, அக்‌ஷய் குமாரின் திரைப்படங்கள் தோல்வியடைவது ஏன்?

பாடநூல்களில் வரலாற்றை மாற்றுவதற்கு முன்னர் பாஜகவின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் பாலிவுட் உலகம் களத்தில் குதித்திருக்கிறது. சமீபத்தில் அப்படி ஒரு பார்வையில் ஜூன் 3 ஆம் தேதி வெளிவந்த படம் "சாம்ராட் பிருத்விராஜ்".

Govind

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். Newssensetn தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

வரலாற்றாசிரியர்கள் மொகலாய ஆட்சியை மட்டும் அதிக கவனம் கொடுத்து எழுதியிருக்கிறார்கள், இந்து மன்னர்களின் ஆட்சி குறித்து எழுதவில்லை என்று சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. இன்றைக்கு மதம் சார்ந்த கண்ணோட்டத்தின் படி அமித்ஷா வரலாற்றைப் பார்க்கிறார் என்று பல வரலாற்றாசிரியர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

பாடநூல்களில் வரலாற்றை மாற்றுவதற்கு முன்னர் பாஜகவின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் பாலிவுட் உலகம் களத்தில் குதித்திருக்கிறது. காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் வசூலிலும் வெற்றி பெற்றது. சமீபத்தில் அப்படி ஒரு பார்வையில் ஜூன் 3 ஆம் தேதி வெளிவந்த படம் "சாம்ராட் பிருத்விராஜ்".

பாஜக ஆதரவாளர்களால் கடைசி ஹிந்து மன்னன் என்று இந்த சாம்ராட் பிருத்விராஜ் அழைக்கப்படுகிறார். இவரது வரலாற்றை நிறையச் சேர்க்கைகள், கற்பனையோடு யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இயக்குநர் சநய்திரபிகாஷ் திவேதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நாயகனாகப் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். 2017ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் அவரது மனைவியாக வரும் இளவரசியாக நடித்துள்ளார். தவிர சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உட்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.

சாம்ராட் பிருத்விராஜ்

சுமார் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இத் திரைப்படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்கள் வரிவிலக்கு அளித்திருந்தன. இப்படி நேரடியாக பாஜகாவால் இப்படம் குளிப்பாட்டப் பட்டாலும் வசூலில் பெருந்தோல்வியை சந்தித்திருக்கிறது.

வெளியான முதல் நாளே இந்திய அளவில் இப்படம் ரூ.10 கோடியை மட்டுமே வசூலித்தது. ஒரு வார வசூல் ரூ.55 கோடி மட்டுமே. இப்படி படம் தோல்வியடைந்தது தயாரிப்பாளர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அக்ஷய்குமார் போல பாஜகவின் தீவிர ஆதரவாளரான கங்கனா ரனாவத் நடித்து சமீபத்தில் வெளியான "தாகத்" திரைப்படமும் இப்படி பெரும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வெளியான எட்டாவது நாளில் வெறும் 20 டிக்கட்டுகள் மட்டுமே விற்று ரூ.4,400 மட்டுமே வசூலித்து தோல்வி அடைந்து சாதனை படைத்தது.

அதே போன்று "சாம்ராஜ் பிருத்விராஜ் திரைப்படமும் வெளியான முதல் வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சாம்ராட் பிருத்விராஜ்

12ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மற்றும் டெல்லியை ஆண்டு கொண்டிருந்த பிருத்விராஜ் எனும் மன்னனின் வரலாற்றைத் தழுவித்தான் இப்படம் எடுக்கப்பட்டது. பிருத்விராஜ் ஆண்டு கொண்டிருந்த அதே நேரம் கஜினியில் அரசனாக இருக்கும் முகமது கோரி டெல்லியைக் கைப்பற்ற நினைக்கிறார். கூடவே கன்னூஜின் ராஜாவான ஜெய்சந்தின் மகள் சம்யுக்தாவுக்கும் பிருத்விராஜ்ஜுக்கும் காதல் பிறக்கிறது.

தந்தை ஜெய்சந்தின் தடையை மீறி மகள் சம்யுக்தா, பிருத்விராஜை திருமணம் செய்கிறார். இதைத் தொடர்ந்து பிருத்விராஜை பழிவாங்க, முகமது கோரியுடன் கை கோர்க்கிறார் ஜெய்சந்த். இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே இப்படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தை உருவாக்க 4 ஆண்டுகள் தேவைப்பட்டதாகப் பேட்டி ஒன்றில் அக்ஷய்குமார் தெரிவித்திருந்தார். ஆனால் படத்தைப் பார்த்தால் இயக்குநர் சந்திர பிரகாஷ் திவேதி வரலாற்றுத் தரவுகளைத் திரட்டியதற்கான எந்தவொரு சான்றும் படத்தில் இல்லை.

படம் முழுக்க வசனங்கள் பாஜகவின் இந்துத்துவா பிரச்சாரமாகவே இருக்கிறது. அதுவும் முரண்பாடில்லாமல் இல்லை. படம் நெடுக பாலின சமத்துவம் பேசிக் கொண்டு இறுதிக் காட்சியில் ராணி சம்யுக்த்தாவும் அவரது அரண்மனைப் பெண்களும் உடன் கட்டை ஏறுவது மிகப்பெரிய முரண். சதி எனும் உடன்கட்டையை ராஜாராம் மோகன்ராய் காலத்திலிருந்து தடை செய்தார்கள் என்றால் இந்தப் படம் இந்த கொடிய பழக்கத்திற்கு நியாயம் சொல்கிறது.

சாம்ராட் பிருத்விராஜ்

மேலும் கோயில்களை அவர்கள் மசூதிகளாக மாற்றினார்கள் என்று ஒரு வசனம் வலிந்து படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது. பிருத்விராஜ்ஜை தோற்கடித்த பிறகே இங்குக் கோரி முகம்மது ஆட்சி துவங்குகிறது. அதற்குள் கோவில்கள் இடிக்கப்பட்டன என்பது ஒரு அப்பட்டமான பொய். படத்தில் பிருத்விராஜ் அரசவையில் போருக்கு முன் மத முழக்கங்கள் எழுப்பப்படுகிறது. ஆனால் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பிருத்விராஜ்ஜை யாரும் ஒரு இந்து மன்னனாகப் பார்க்கவில்லை. அதே போன்று முகமது கோரியையும் ஒரு முஸ்லீம் மன்னராகப் பார்க்கவில்லை.

இதற்கு மேல் இப்படம் ஒரு திரைக்கதை என்ற அளவில் கூட பார்வையாளரை ஈர்க்கும் வண்ணம் எடுக்கப்படவில்லை. பாஜக ஆதரவை வைத்தே கல்லா கட்டிவிடலாம் என்று இருந்த படக்குழுவினரை மக்கள் தோற்கடித்திருப்பதே உண்மை. அக்ஷய்குமாருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தாலும் அவரால் ஒரு கம்பீரமான மன்னராக நடிக்க முடியவில்லை. இந்தப்படத்தில் ஒரு போர்வீரனாக, மன்னராக நடித்திருப்பது தனக்கு பெருமைக்குரிய விஷயம் என்று அவர் கூறினாலும் அந்தப் பெருமையை மக்கள் அங்கீகரிக்கவில்லை.

அக்‌ஷய் குமார் - மோடி நேர்காணல்

இந்து தேசியவாதத்தின் போஸ்டர் பாய் என்று அக்ஷய்குமார் பாஜகவோடு கொண்டுள்ள நெருக்கத்தின் பொருட்டு அழைக்கப்படுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்ஷய்குமார் பிரதமர் மோடியை நேர்காணல் செய்தார். அப்போது அவர் பிரதமர் மோடி மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவாரா இல்லை நறுக்கிச் சாப்பிடுவாரா என்ற வரலாற்றுப் புகழ் மிக்க கேள்வியெல்லாம் கேட்டுக் கொடுமைப்படுத்தினார்.

இந்தப் படம் வெளியான வெள்ளிக்கிழமை அன்று "வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் முகலாயப் படையெடுப்பார்களைப் பற்றிய தகவல்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் பிருத்விராஜ் போன்ற இந்துமன்னர்களின் பெருமை மற்றும் வீரம் பற்றி சிறிதும் இல்லை என்று அக்ஷய்குமார் ஊடகங்களில் பேட்டி அளித்தது சர்ச்சையானது. இதைத்தான் அமித்ஷாவும் கூறியிருந்தார். ஆனாலும் ‘இந்துக்கள்’ படத்தை நிராகரித்து விட்டார்கள்.

நாயகன் அக்ஷய்குமாரிடம் படத்தை ஒரு சிறப்புத் திரையிடலாகப் பார்த்த உள்துறை அமைச்சர் அமித்ஷா "இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சியின் பயணத்தில் இது ஒரு முக்கிய பகுதியாகும். இது நாட்டை அதன் பெருமை கொண்ட காலத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும்" என்று விவரித்தார். ஆனால் படம் என்னமோ ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிட்டது.

பல வரலாற்று அறிஞர்கள் இப்படத்தின் திரைக்கதை உண்மைக்கு மாறானது என்று விமர்சித்திருக்கிறார்கள். ரசிகர்களோ படத்தையே நிராகரித்திருக்கிறார்கள். இதற்கு மேல் இப்படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?