தனுஷ்-சாய்பல்லவி Twitter
சினிமா

Youtube: ஹேக் செய்யப்பட்ட வண்டர்பார் சேனல்; நீக்கப்பட்ட ரவுடி பேபி பாடல் - நடந்தது என்ன?

Keerthanaa R

கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்தது மாரி 2 திரைப்படம். இதன் முதல் பாகத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் பாடல்கள் இன்றும் நம் பிளேலிஸ்டுகளில் ஆட்சி புரிந்துகொண்டிருக்க, இரண்டாம் பாகத்திற்கு, இளைஞர்களின் favorite மியூசிக் டைரக்டர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மாரி 2 ஆல்பத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது ரவுடி பேபி பாடல். நடன புயல் பிரபுதேவா இந்த பாடலுக்கு நடனம் வடிவமைக்க, தனுஷும் சாய் பல்லவியும் போட்டிப் போட்டுக்கொண்டு நடனமாடியிருப்பார்கள். இதுவரை எந்த பாடலும் கண்டிராத அளவுக்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றது. யூட்யூபில் 120 மில்லியன் வியூக்களை பெற்று சாதனையும் புரிந்திருக்கிறது இந்த பாடல். இப்பாடல் வரிகளை நடிகர் தனுஷ் எழுதியிருந்தார்.

Dhanush-Prabhu Deva

டிரெண்டிங்கில் இருந்த ரவுடி பேபி பாடலுக்கு இப்போது சோதனையாகியுள்ளது. ஹேக்கர்கள் இந்த பாடலை யூடியுபிலிருந்து நீக்கியுள்ளனர். மேலும் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர் பார் ஃபிலிம்ஸின் சேனலையும் இவர்கள் முடக்கியுள்ளனர்.

முடக்கப்பட்ட சேனல், மற்றும் நீக்கப்பட்ட பாடலை மீட்டெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?