பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த படமான பதான் திரைப்படத்தின் பேஷ்ரம் ராங்க் பாடல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டிசம்பர் 12ம் தேதி ரிலீஸான 2 மணி நேரத்தில் இந்த பாடல் 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. 3 கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ள இந்த பாடல் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் இந்த பாடல் அவமதிப்பானதாகவும் ஆபாசமாகவும் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தீபிகா காவி நிற பிகினி அணிந்து தோன்றுவதனால் இந்த பாடல் இந்து மதத்துக்கு எதிரானது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
பாலிவுட் மீதான வெறுப்புணர்வு இந்த பாடல் மூலம் மீண்டும் எதிரொளித்துள்ளது.
தொடர்ந்து #BoycottPathan சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டில் இருக்கிறது.
இந்த பாடலில் பல பெண்களும் ஆண்களும் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஒரு கடற்கரையில் நடனமாடுவதாக அமைந்திருக்கிறது.
பெண்கள் அனைவருக்கும் கவர்ச்சியான ஆடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நடிகை தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக தோன்றியுள்ளார்.
மேலும் நடன அசைவுகளும் காமம் தொடர்புடையவையாக இருப்பதாக குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். நடன இயக்குநர் வைபவியை சிலர் பாராட்டியும் சிலர் எதிர்த்தும் வருகின்றனர்.
பிகினி உடையில் பல பெண்கள் உடலைக் காட்சிப்படுத்தும் இந்த பாடலை "பாலிவுட்டின் அழுக்கு" எனக் கூறி கொந்தளிக்கின்றனர் நெட்டிசன்கள்.
"பாலிவுட் பெண்களை எப்படிப் பார்கிறது என்பதை இந்த பாடல் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தி சினிமாவைப் பொருத்தவரையில் பெண்கள் வெறும் பாலியல் பொருட்கள் மட்டுமே" எனக் கூறியுள்ளார் நெட்டிசன்களில் ஒருவர்.
காவி நிறத்துக்காக பலர் இந்த பாடலைக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
"காவி துறத்தல், தியாகம், அறிவு, தூய்மை மற்றும் சேவையின் நிறம் இதனை வெக்கம் கெட்ட நிறமாக மாற்றி வருகிறது பாலிவுட்" என ஒரு பயனர் கூறியிருந்தார்.
பாடலில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் சலாம் செய்துகொள்ளும் காட்சியைக் குறிப்பிட்டு "முழுவதும் இஸ்லாம்மயமாக்கப்பட்டு விட்டது" என ஒருவர் கூறியுள்ளார்.
இதே நேரத்தில் இந்த பாடலுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்கின்றன.
"தென்னிந்திய படமான காந்தாராவில் சில பாலியல் சார்ந்த நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இவைற்றை போல தான் இந்த பாடலும்" எனக் கூறிவருகின்றனர்.
"யாரும் படம் முழுவதும் சேலையில் நடிக்க முடியாது. இது 21ம் நூற்றாண்டு. நாம் சில மேற்கத்திய விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என ஒருவர் கூறியுள்ளார்.
முன்னதாக அக்ஷய் குமார் நடித்த குட்புல்லி படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் உடை விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராட்சசன் படத்தின் ரீ மேக்கான இந்த படத்தில் அமலா பாலின் உடையுடன் ரகுலின் உடை ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
பாலிவுட்டுக்கு 2022ம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருந்திருக்கிறது.
இதனால் 2023ல் பதான் திரைப்படம் நல்ல தொடக்கத்தை வழங்கவேண்டியது அவசியம்.
ஜனவரி 25ம் தேதி பதான் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust