Samantha Ruth Prabhu Diagnosed With Myositis Twitter
சினிமா

Samantha : Myositis நோயால் பாதிக்கபட்டுள்ள நடிகை - இன்ஸ்டாவில் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

Priyadharshini R

ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்காக டப்பிங் செய்யும் நடிகை சமந்தாவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் யசோதா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.

Samantha

இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,

யசோதார ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை அளிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது.

முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் ஆகும்.

இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சமந்தாவுக்கு திரைப்பிரபலங்கள் உட்பட ரசிகர்கள், ஆறுதல் தெரிவித்து கமென்ட் செய்து வருகின்றனர்.

Myositis என்பது தசைகள் தொடர்பான ஒரு நோய் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?