அரிய வகை தோல் நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பொருட்டு சிகிச்சைக்காக அவர் அமெரிக்க சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் ஏம் மாய சேசாவே ( விண்ணை தாண்டி வருவாயா) திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் சமந்தா. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், அவ்வப்போது தமிழிலும் நடித்து வந்தார்.
அசாதாரண நடிப்பு திறனால் இரு மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. மெல்ல Female-centric படங்களிலும் இவர் நடிக்க ஆரம்பித்தார். தன் முதல் படத்தின் கதாநாயகனான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார். மனம் ஒப்பாத காரணங்களால் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
பல நாட்களாக தன் விவாகரத்து குறித்து மனம் திறக்காத நடிகை, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான காஃபி வித் கரனில், இது குறித்து பேசியிருந்தார். தன்னையும், தன் முன்னாள் கணவரையும் ஒரே அறையில் விட்டால், கூர்மையான பொருட்களை மறைத்து வைத்து விடுங்கள் என இவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவர் நடித்துள்ள யசோதா திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியானது. எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சமீப காலமாக புகைப்படங்கள் எதுவும் வெளியிடவில்லை. அதோடு எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அரிய வகையான சரும நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோயின் பெயர் Polymorphous Light Eruption என்று கூறப்படுகிறது. சூரிய ஒளி அதிகமாக சருமத்தில் படுவதனால் இந்த நோய் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி எங்கும் செல்லாமல் இருப்பதாகவும், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும் பேச்சுக்கள் வலம் வருகிறது.
ஆனால் சமந்தாவின் மேலாளைரை தொடர்பு கொண்ட போது, "இந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், இவற்றை நம்பவேண்டாம்" என அவர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust