Shah Rukh Khan ட்விட்டர்
சினிமா

Shah Rukh Khan: ’உலகின் செல்வாக்கான நபர்’ முதலிடத்தில் கிங் கான்! பட்டியலில் யார் யார்?

Keerthanaa R

TIME100 ரீடர் போலின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.

90களில் இந்தி திரையுலகில் ஹீரோ அறிமுகமாகி பலப் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் ஷாருக் கான். ரொமான்ஸ் முதல் ஆக்‌ஷன் வரை அனைத்து ஜானர்களிலும் சூப்பர் ஸ்டாராக திகழும் ஷாருக் கான், உலகளவில் பாலிவுட் சினிமாவின், இந்திய சினிமாவின் அடையாளம்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலகெங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

டைம்ஸ் மேகசினின் வருடாவருடம் அதிக செல்வாக்குடைய 100 நபர்கள் பட்டியலை வெளியிடும். மேகசினின் வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசையில், அதிக செல்வாக்குடைய நபராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஷாருக் கான்.

வாசகர்களின் 4 சதவிகித வாக்குகளை நடிகர் பெற்றிருக்கிறார். இளவரசர் ஹேரி - மேகன் தம்பதியினர், அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் போன்றவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளார் ஷாருக் கான்.

உலகின் பிரபலமான நபர்களில் யார் டைம்ஸ் பத்திரிக்கையின் அதிக செல்வாக்குள்ள நபர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என வாசகர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு வாசகர்கள் வாக்களித்தனர்.

ஷாருக் கானுக்கு 1.2 மில்லியன் வாக்குகள் கிடைத்துள்ளன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?