பிரபல பாடகரான கேகே, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி பாடல்களைப் பாடியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த இசைக் கச்சேரியில் கலந்துகொண்ட கேகே- விற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இரவு 10:30-க்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் கேகே-வின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மரணம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் மொத்தமாக 3 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாகக் கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தைக் களைப்பதற்காகத் தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது. மேலும் இந்த அரங்கத்தில் ஏசி வேலை செய்யவில்லை. இது போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால், போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust