சுஸ்மிதா சென் Twitter
சினிமா

சுஸ்மிதா சென் - லலித் மோடி : கேலி கிண்டல்களுக்கு சுஸ்மிதா பதிலடி

Antony Ajay R

சுஸ்மிதா சென் மற்றும் லலித் மோடி டேட் செய்து வருவதாக, லலித் மோடி தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். "விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் லலித் மோடி கூறியிருந்தார்.

முன்னாள் மிஸ் யூனிவர்ஸின் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலானது. இதனை சிலர் கேலி, கிண்டலும் செய்தனர். சுஸ்மிதா - லலித் மோடி உறவுகுறித்து பலர் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுஸ்மிதா கூலாக ஒரு பதிலைக் கூறியுள்ளார்.

சுஸ்மிதாவை தனது SMSக்கு பதிலளிக்கக் கூறிய பழைய ட்வீட் திடீரென வைரலாக இந்தியா முழுவதும் சுஸ்மிதா - லலித் மோடி பேச்சு பொருளாகினர்.

இதனால் வந்தக் கிண்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் சுஸ்மிதா. அவரை, "Gold Digger" அதாவது தங்கத்தைத் தோண்டி எடுப்பவர் எனக் கூறியவர்களுக்கு "நான் வைரத்தை விரும்புபவள்" என பதிலளித்துள்ளார் சுஸ்மிதா.

அந்த பதிவில், "நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு மகிழ்ச்சியற்றதாக பரிதாபமாக உள்ளது எனப் பார்ப்பது வேதனை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், "நான் நேரில் கூட பார்த்திடாத சில நண்பர்கள் என் வாழ்க்கையையும் என் குணத்தையும் நன்கு தெரிந்தவர்கள் போலப் பேசி வருகிறார்கள்" எனவும் கூறியிருந்தார்.

தன்னை Gold Digger என விமர்சித்தவர்களுக்கு, "நான் எப்போதும் வைரத்தை தான் விரும்புவேன். அதை நானே எனக்காக வாங்கிக் கொள்வேன்" என பதிலடிக் கொடுத்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?