LCU Twitter
சினிமா

LCU : லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பது என்ன? அங்கு என்னென்ன நடக்கும்?

Antony Ajay R

ஒரு பெரிய ரோல்ஸ் ராய்ஸ் கார், விலையுயர்ந்த ஸ்பீக்கரில் ஆங்கில ராப் பாடல், மூக்கு நுனியில் போதைப்பொருள் ஒன்றின் வெள்ளை கறை, கொஞ்சமாக நரைத்த தாடி, கடுக்கன், கண்களில் இரத்த வெறியுடன் ஒருவன்… கார் வேகமாக வந்து ஒரு லாரியை மறிக்கிறது லாரியில் பின்னால் காய்கறி, பழங்கள், சில சமையல் பாத்திரங்கள். முன்னால் இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை. காரில் இருந்து கறிக்கடை கத்தியுடன் இறங்குவது ரோலெக்ஸ் (சூர்யா). அவரது கொடூரமான சிரிப்பைக் கண்டு அஞ்சாமல் லாரியில் இருந்து குதிப்பது டில்லி… வெல்கம் டு லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்!

கைதி, விக்ரம் திரைப்படங்களின் கதாபாத்திரங்களை வெற்றிகரமாக கிராஸ் ஓவர் செய்ததன் மூலம் ஒரு யூனிவர்ஸை படைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இது தமிழ் சினிமாவுக்கு புதியதில்லை. சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஆரண்ய காண்டம் திரைப்படங்கள் ஒரே யூனிவர்ஸை சேர்ந்தவைதான். ராஜன் வகையறா வெற்றி மாறன் திட்டமிட்டபடி எடுக்கப்பட்டால் அது வடசென்னை யூனிவர்ஸ்.

ஆனால் "என்னுடைய யூனிவர்ஸ் உருவாகிவிட்டது அதற்கு மக்களின் ஆதரவும் கிடைக்கிறது" என்பதைக் கூறி இனி இறங்கி வேலை செய்ய வேண்டியது தான் என்கிறார் லோகி

LCU

மேலே சொன்ன காட்சிக்குப் பிறகு, ரோலெக்ஸ் கையிலிருந்த கத்தியை வேகமாக வீசுகிறார். அது டில்லியின் மார்பில் குத்தி நிற்கிறது. அப்போது ரோலெக்ஸின் கண்களுக்கு ஒரு க்ளோசப். தன்னுடைய 27 ஆண்டுக்கால வளர்ச்சியை மீட்டெடுக்கப் போகும் வெறி அக்கண்களில்… அப்போது டைடில் கார்ட் “The Raise of Rolex”.

லோகேஷ் சமீபத்தில் கொடுத்த நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு பின் வரும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் படங்கள் ரசிகர்களால் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

  1. BEJOY and the boys

  2. Agent TINA

  3. The rise of ROLEX

  4. NAPOLEON

  5. Black Squad

  6. AMAR

  7. Who is SANTHANAM

  8. ANBU - lifetime settlement

  9. Vikram 3

  10. Kaithi 2

LCU

பிஜாய் டில்லியின் லாரியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது ஒரு ஃபோன்கால் வரும். அதில் பிரபஞ்சன் பாத்திரம் “ஆபிசர்ஸ் திரும்பத் திரும்ப போன் பண்றாங்க சார்” எனச் சொல்ல, அது ஒன்னுமில்ல எனச் சொல்லிவிட்டு வைத்துவிடுவார் பிஜாய். அப்போது அவர் சுதாரிப்பாக, “நீ அங்க இருக்க வேண்டாம் பிரபஞ்சன்” எனச் சொல்லியிருந்தால் விக்ரம் படமே இல்லை. என்கிறார் லோகேஷ்.

சரி இந்த பிரபஞ்சன் அந்த நெருக்கடியிலும் பிஜாய்யை மட்டும் நம்பியது ஏன்? “எனக்கு எதாவது ஆச்சுன்னா என் அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுங்க” எனப் பிரபஞ்சன் சொன்னால் விக்ரமை பிஜாய்க்கு முன்னாடியே தெரியுமா? எப்படித் தெரியும்? என்னவாக தெரியும்?

25 வருடமாக விக்ரம் ஃபாலோ செய்து வரும் அவரது மகன் பிஜாயிடம் வேலை செய்கிறார். பிஜாய்க்கு விக்ரமை ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. பிரபஞ்சன், அஜாஸ் என இரண்டு திறமையான போலிஸ்காரர்கள் பிஜாயின் அஜாக்கிரதையால் இறக்கின்றனர் என்றால் இதற்கு முன் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும்?

இதை தெரிந்துகொள்ள பிஜாய் அண்ட் தி பாய்ஸ் திரைப்படம் அன்புடன் வரவேற்கிறது.

இது மாதிரி ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் ஒரு கதை ஒளிந்திருக்க இந்த யூனிவர்ஸல் படங்கள் எடுக்கப்பட்டால் அதில் எந்தெந்த முக்கிய கதாபாத்திரம் எல்லாம் இடம் பெறும்?

டில்லி

ரைஸ் ஆஃப் ரொலெக்ஸின் ஒரு காட்சியை மேலே பார்த்தோம். ஆனால் அந்த கறிக்கடை கத்தியெல்லாம் பிடுங்கிப் போட்டுவிட்டுத் திமிறுவார் டில்லி. அவருக்கு லாரி ஓட்டத் தெரியும் என்பதால் தான் பிஜாய் அவரை ஆட்டத்தில் சேர்ப்பார். ஆனால் கதையில் டில்லி ரௌடிகளை ஓட ஓட விரட்டியடிப்பார்.

“யாரோ டில்லியாம், குறுக்க வந்து கெடுத்துட்டான்” எனக் கைதியில் கூறும் போது சிறைக்குள் இருக்கும் அடைக்கலம் “அவன் யாரோ ஒரு டில்லி இல்ல” எனக்கூறும். அதாவது டில்லி பாத்திரம் கைதி கதைக்குள் வந்ததுக்கு ஒரு பேக் ஸ்டோரி இருக்கிறது என்பதைத்தான் அந்த வசனம் உணர்த்தும்.

டில்லி 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு கபடி வீரர் என்பதை நேர்காணலில் உடைத்திருக்கிறார் லோகேஷ். லோலோஷின் யூனிவர்ஸில் கபடி என்றால் அது மாஸ்டர் படத்தில் ஆடுவது தான். அந்த படத்திலும் இறுதியில் தளபதி ஜெயிலுக்கு செல்வார். ஒருவேளை ஜெயிலில் ஜே டி யும், டில்லியும் சந்தித்தால் லோகேஷின் யூனிவர்ஸில் லோகேஷும் ஒரு பாத்திரமாக இருப்பார். ஆனால் அந்த சீனெல்லாம் இல்லை என எண்ட் கார்ட் போட்டுவிட்டார் லோகேஷ்.

இன்ஸ்பெக்டர் பிஜாய்

2000 கிலோ ரா சப்டன்ஸ், 900 கிலோ கொக்கைனை ஒரே நேரத்தில் கையாளும் ஒரு இன்ஸ்பெக்டர். அவருக்குக் கீழ் ஒரு படை. மார்வல் யூனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி போன்ற குழுவின் தலைவர். தனது மனைவி மற்றும் மகளை இழந்தவரும் கூட.

அடைக்கலம்

அன்புக்கு மேல ரோலக்ஸ்க்கு கீழ என இவரைச் சொல்லலாம். பார்வையிலேயே மிரட்டும் அடைக்கலத்துக்கு டில்லியை எப்படித் தெரியும்? கைதி சீக்குவல், ரோலெக்ஸ், விக்ரம், அன்புவின் படங்களில் இவரை எதிர்பார்க்கலாம்.

அன்பு

அன்பு

உடல் மொழியிலிருந்து உயரம் வரை அன்புக்கும் ரொலக்ஸுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கவனிக்க முடியும். அதை வெளிப்படையாகக் கூறியது தான் லைஃப் டைம் செட்டில்மென்ட் வசனம். விக்ரமின் மகன் பிரபஞ்சன் மாதிரி ரோலக்ஸின் மகனாக அல்லது வேறு இரத்த பந்தமாக அன்பு இருக்கலாம் என்பது ஃபேன் தியரி.

அஜாஸ் அஹ்மத்

கைதியில் இறந்துவிடும் இந்த கதாபாத்திரம் பிஜாய் அண்ட் பாய்ஸ் ப்ரீக்குவலில் அல்லது அன்பு ப்ரீக்குவலில் இடம் பெறலாம்.

நெப்போலியன்

நெப்போலியன்

சிறிய உருவம், நெஞ்சில் நேர்மை, துணிச்சலான பாத்திரம் நெப்போலியன். கொக்கைன் அன்புவின் குழுவுக்குக் கிடைக்காமல் போக முக்கிய காரணங்களாக இருக்கும் அனைவரையும் ரோலக்ஸ் கொல்ல நினைத்தால் அந்த பட்டியலில் நெப்போலியன் பாத்திரத்துக்கும் இடம் உண்டு. நெப்போலியனைக் காக்க விக்ரம் அவரை விரைவாக நெருங்குவது மட்டுமே வழி. 900 கிலோ கொக்கை இருக்கும் இடத்தை யார் முதலில் அடைகிறார்கள் என்கிற சேஸ் கைதி படமாக இருந்தது போல நெப்போலியனை யார் முதலில் அடைகிறார்கள் என்பது தான் நெப்போலியன் கதையாக இருக்கும் (இதுவும் ஒரு ஃபேன் தியரி தான்).

விக்ரம் படத்தில் கூட நெப்போலியனுக்கு ஒரு காட்சி இருந்ததாக நேர்காணலில் லோகேஷ் கூறியிருக்கிறார்.

காமாட்சி

டில்லியின் துணிச்சலாலும் தைரியத்தாலும் ஈர்க்கப்பட்டு வீட்டை மறந்து அவருடனே பயணம் செய்யும் பாத்திரம் காமாட்சி (தீனா). இனி வரும் படங்களில் துப்பாக்கி பிடிக்கப் பழகிக்கொண்டு கண்ணைத் திறந்து சுட்டுத்தள்ளலாமோ?

அமர்

Fahadh Faasil

கடைசியாக மாஸ்க் மாட்டிக்கொண்டு சோலோவாக புறப்படும் அமருக்கு இரண்டு சோதனைகள். ஒன்று ஏஜென்சி அவருக்கு எதிராகத் திரும்பி அவரை கொல்ல நினைப்பது. மற்றொன்று ரோலக்ஸ் அமரை கொல்ல நினைப்பது.

மொத்தமாகச் சந்தனத்தின் குடும்பத்தையே அழித்துக் கூட போதைப்பொருள் உற்பத்தியைத் தடுத்தால் போதும் என நினைப்பது, பிஜாயின் முன் கதைகளை உதறிவிட்டு உனக்கும் டெரரிஸ்ட்க்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்பது போன்ற குணங்கள் இந்த அமர் நல்லவனா? கெட்டவனா? எனக் கேள்வி எழுப்புகின்றன. இதனால் அமர் கதாபாத்திரம் ப்ரீக்குவலில் வில்லனிசம் கொண்ட ஹீரோவாகவும், சீக்குவலில் காதலியை இழந்த தீவிரவாதியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தனம்

Vijay Sethupathi

விக்ரம் படத்தில் சந்தனம் கொல்லப்பட்டது உறுதி. ஆனால் ரோலக்ஸின் 27 வருடக் கதை போலச் சந்தனத்துக்கும் ஒரு 10 ஆண்டுக்கால கதையாவது இருக்கும். அது தான் சந்தனத்தை வைத்து இனி சாத்தியமிருக்கக்கூடிய படம். அதில் மூன்று லவ்ஸ்டோரிகள் இருக்கலாம். க க க போ!

விக்ரம்

Vikram

பேட்மேன் ரெஃபரென்ஸுடன் முடிக்கப்பட்ட விக்ரம் கதை ஒரு அகண்ட பார்வையில் விரியும். மொத்த ட்ரக் மாஃபியாவையும் மற்ற கதாபாத்திரங்களையும் கழுகு பார்வையிலிருந்து ஸ்கெட்ச் போடும் கதாபாத்திரம் விக்ரம் தான்.

பெத்தது விக்ரம் தான் சந்தேகமே வேண்டாம் என்றால் தனது ஒரே மகனை 30 வருடமாக கண்காணித்து வரும் அவர் பிரபஞ்சனின் மரணத்தை ஏன் தடுக்கவில்லை? அப்போது அவர் எங்கிருந்தார்? என்ற கேள்விகளுக்கு விடை விக்ரம் ப்ரீக்குவலில் கிடைக்கும்.

ரோலக்ஸ்

Rolex

விக்ரம் யூனிவர்ஸ் ட்ரக் மாஃபியாவைச் சுற்றித் தான் நகர்கிறது என்றால் இதன் ப்ரீக்குவல், சீக்குவல் எல்லாவற்றிலும் ரோலக்ஸ் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பார். இந்த யூனிவர்ஸில் இரண்டு கடவுல்களில் ஒன்று லோகேஷ் கனகராஜ் மற்றொன்று ரோலக்ஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?