மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஆவார். 1986இல் பிறந்தவர் எம் எஸ் தோனி, தி அன்டோல்ட் ஸ்டோரி, கேதார்நாத், சிச்சோரே ஆகிய வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். பல விருதுகளும் பெற்றிருக்கிறார். 2017 முதல் இரண்டு முறை ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் பிரபலங்கள் 100 பேர் பட்டியலில் தோன்றியிருக்கிறார்.
தில்லி பொறியியல் கல்லூரியில் படிப்பை நிறுத்தி விட்டு மும்பையில் நாடகத்துறையில் நுழைந்தார். முதலில் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். பிறகு திரைப்படங்களிலும் நடிக்கத் துவங்கினார்.
ராஜ்புத் தனது 34வது வயதில் ஜூன் 2020இல் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது கடைசிப் படமான தில் பெச்சாரா (2020) அவரது மரணத்திற்கு பிறகு ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஊடகங்களில் இவரது மரணம் பெறும் சர்ச்சையானது.
தற்போது அவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆனாலும் மீண்டும் அவரது மரணம் சர்ச்சையாகியிருக்கிறது. அவரது மரணம் தொடர்பான மர்மம் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. அவருக்குப் போதைப்பொருள் வழங்கியதாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதேப் பரிசோதனை அறிக்கையானது அவரது மரணத்திற்கான காரணம் தூக்கிலிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார் என்று கூறியது. அதனால் இந்த வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டது. சமீபத்தில் அவரது சகோதரி பிரியங்கா சிங், தனது சகோதரரது மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என சில விளக்கங்களை கூறுகிறார்.
சுஷாந்த் சிங் இறந்து போன கோலத்தை அவரது வீட்டில் பிரியங்கா பார்த்ததை விளக்கினார்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா தனது காரணங்களை முன்வைத்தபோது, அவர் கூறியதாவது, சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்புதான் தனது வீட்டை மாற்றியுள்ளார். அந்த வீட்டிற்கு அவர் இறந்த பிறகே பிரியங்கா சென்றிருக்கிறார். அவர் சென்ற போது எல்லோரும் சுஷாந்த் சிங் கோலத்தைப் பார்த்தார்கள். நிறைய போலீசார் இருந்தனர்.
ஊடகங்களும் இருந்தன. அது ஒரு பிக்னிக் ஸ்பாட் போல இருந்தது. இரவில் அங்கே பிரியங்கா நுழைந்த போது போலீசார் அந்த அறைக்கு கிரைம் சீன் மஞ்சள் நாடாவால் சீலிட்டிருந்தனர். ஒன்பது நாட்களுக்கு பிறகுதான் அது அகற்றப்பட்டு பிரியங்கா அந்த அறையில் நுழைந்து பார்த்தார்.
பிரியங்கா தான் ஒரு கிரிமினல் வழக்கறிஞர் என்றும் வரதட்சணை தற்கொலை உள்ளிட்ட பிற கொடூரமான மரணங்களை பார்த்திருக்கிறேன் என்றார். தற்கொலை செய்து கொண்டால் கண்கள் பிதுங்கி பெரிதாக இருக்கும். நாக்கு வெளியே தள்ளப்பட்டிருக்கும். இந்த அறிகுறிகள் எவையும் தூக்கில் தொங்கிய சுஷாந்த் சிங்கிடம் இல்லை என்று அவர் கூறுகிறார்.
மேலும் சுஷாந்த் சிங் அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. தற்கொலை செய்து கொண்ட அறையில் கூரையைப் பார்த்த போது சுஷாந்த் சிங் அதில் தொங்கியிருக்க முடியாது என்று பிரியங்கா கூறுகிறார்.
படுக்கைக்கும் மின் விசிறிக்கும் இடையே உள்ள தூரம் போதுமானதாக இல்லை. சுஷாந்தின் உயரம் அளவுக்கு கூட அந்த தூரமில்லை என்கிறார் பிரியங்கா. சுஷாந்தின் மரணப் பதிவில் அவரது உயரம் 6.18 அடியிலிருந்து 5.10 அடி அல்லது அதற்கும் குறைவாக மாற்றப்பட்டது என்கிறார் அவர்.
பிரியங்கா தனது அவதானிப்புகளை வழக்கை விசாரிக்கும் சிபிஐயிடம் பகிர்ந்து கொண்டார்.
முன்பு சுஷாந்த் சிங் தனது வாழ்க்கையை ஒரு தன்வரலாற்றுப் படமாக்க விரும்பினார் என்று பிரியங்கா கூறுகிறார். தற்போது அவர் இல்லை என்றாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் சுஷாந்த் சிங்கின் வரலாற்றுப்படத்தை எதிர்காலத்தில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஆண்டுகள் இரண்டானாலும் சுஷாந்த் சிங்கின் தற்கொலை சர்ச்சை இன்னும் முடியவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust