பொன்னியின் செல்வன்  Twitter
சினிமா

பொன்னியின் செல்வன்: படம் பார்க்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

படம் பார்ப்பதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய, ஸ்பாயிலர்கள் இல்லாத கதைச் சுருக்கம் இதோ!

Keerthanaa R

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை வெளியாகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தை தழுவி படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. புத்தகம் வாசித்தவர்கள், வாசிக்காதவர்கள் என இரு தரப்பினரும் படத்திற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், படம் பார்ப்பதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய, ஸ்பாயிலர்கள் இல்லாத கதைச் சுருக்கம் இதோ!

1. சோழ பேரரசர் சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள் - ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன். சோழ நாட்டின் முடி இளவரசன் ஆதித்த கரிகாலன். உடல் நலம் குன்றிய நிலையில், படுத்தப் படுக்கையாக இருக்கிறார் சுந்தர சோழர்

2. வாணர் குலத்து வீரன் வந்தியத்தேவன். ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பன். இவர் மூலமாகவே தன் தந்தைக்கும் தங்கைக்கும் ஓலை அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன். 

3. அருள்மொழி வர்மனை மக்கள் பொன்னியின் செல்வன் என்றே அழைத்தனர். காரணம், அருள்மொழிக்கு 5 வயது இருந்தபோது குழந்தை தவறுதலாக பொன்னி நதியில் (காவிரி) விழுந்துவிடும். அப்போது அவனை தேவதை போல, முகம் தெரியாத பெண் ஒருத்தி காப்பாற்றி கொடுத்தாள். இதனால் அவனுக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

4. அருள்மொழி வர்மனை அரசனாக்கவேண்டும் என நினைக்கிறாள் அக்காள் குந்தவை. சோழ நாட்டு மக்களும், அருள்மொழி வர்மன் மீது அதீத பிரியமும் நம்பிக்கையும் கொண்டுள்ளதால், அவரே அடுத்த அரசர் ஆகவேண்டும் என அவர்களும் நினைக்கின்றனர்.

5. சோழ நாட்டின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர். இவரை தன் சுயநலத்துக்காக மணந்தாள் நந்தினி. பழுவேட்டரையர் மூலம் சோழ ராஜ்ஜியத்தை அழிப்பதே அவளது நோக்கம்.

6. சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சயர். அரிஞ்சயரின் அண்ணன் கண்டராதித்தர். கண்டராதித்தருக்கு மதுராந்தகன் என்ற ஒரு மகன் உண்டு. 

7. சிவ பக்தியில் மூழ்கியதால், கண்டராதித்தர் ராஜ்ஜியத்தை அரிஞ்சயருக்கு கொடுக்கிறார். ஒரே வருடத்தில் அரிஞ்சயர் உயிர் பிரிந்ததால் அவரது மகன் பராந்தக சுந்தர சோழன் அரசனாகிறான்.

8. சூழ்ச்சி செய்து, நியாயமாக ராஜ்ஜியம் மதுராந்தகனுக்கு தான் சொந்தம் என மெல்ல அவனது மனதை மாற்றுகிறது ஒரு கூட்டம் 

9. மற்றொரு புறம், பழுவேட்டரையரின் மனைவியான இளைய ராணி நந்தினி, ஆதித்த கரிகாலனையும், சோழ அரசையும் பழிவாங்க சந்தர்ப்பம் தேடி வருகிறாள். இதற்காகவே பழுவூர் அரசரையும் மணக்கிறாள்

10. சோழ நாட்டின் முதன் மந்திரி அனிருத்த பிரம்மராயர். இவரது சீடன் திருமலை என்னும் ஆழ்வார்க்கடியான் நம்பி. வைஷ்ணவனாக உலகிற்கு அறிந்த, அனிருத்த பிரம்மராயரின் ரகசிய ஒற்றன். 

நந்தினியின் சதியில் வீழ்ந்ததா சோழ ராஜ்ஜியம்? சுந்தர சோழருக்கு என்ன ஆனது? சோழ நாட்டின் அடுத்த அரசர் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?