Rajini - Sk Twitter
சினிமா

"வாழ்நாள் நினைவாக இருக்கும் இந்த நாள்" - ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Priyadharshini R

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ”டான்” திரைப்படம் கடந்த மே 13-ஆம் தேதி வெளியானது.

லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்த தயாரித்த இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

Don

இந்த நிலையில் இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஏற்கனவே டான் படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன், "இந்திய சினிமாவின் "டான்" உடன் நிற்கிறேன். ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து ஆசி பெற்றேன்.

ரஜினியோடு பேசிய அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும். உங்களது நேரத்திற்கும் டான் படம் குறித்த பாராட்டிற்கும் நன்றி தலைவா " எனப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?