சீரியல் Hotstar
சினிமா

கோபியால் டாப்புக்கு வந்த பாக்கியலட்சுமி! - இந்த வார விஜய் டிவி ரேட்டிங்

ஆதினி

டி.ஆர்.பி ரேட்டிங் பொறுத்தவரையில் விஜய் டிவிக்கும் சன் டிவிக்கும் தான் கடுமையான போட்டி நிலவும். முதல் பத்து இடங்களை இரண்டு சேனல்களின் சீரியல்கள் தான் ஆக்கிரமித்திருக்கும். அத்தி பூத்தார் போல் ஏதாவது ஒரு வாரம் ராஜ் அல்லது கலர்ஸ் தமிழ் சீரியல்கள் முதல் ஐந்து இடங்களில் வரும்.

இந்த வாரமும் அதே நிலை தான். விஜய் டிவி சீரியல்களும், சன் டிவி சீரியல்களும் முதல் பத்து இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இம்முறை பாக்கியலட்சுமி முதல் இடத்தில் உள்ளது. கோபி ராதிகா திருமணம் நடக்குமா நடக்காதா?, கோபி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்யப் போகும் விஷயம் குடும்பத்தினருக்கு எப்போது தெரிய வரும்? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடையைத் தேடித் தான் ரசிகர்கள் பாக்கியலட்சுமி தொடரைத் தவறாமல் பார்த்து விடுகின்றனர். அதன் விளைவாக பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்குத் தள்ளி பாக்கியலட்சுமி முன்னணியில் உள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி தொடரில் இந்த வாரம் முக்கிய திருப்பமாக, தாத்தா கோபியை ராதிகாவிடம் மாட்டிவிடச் சிரமப்பட்டு வீட்டிலிருந்து ரோட்டுக்குச் செல்கிறார். நடக்க முடியாமல் நடந்து சென்று, ராதிகா வீட்டை அடைகிறார். அவரது கெட்ட நேரம் ராதிகா வீடு காலி செய்து விடுகிறார். தாத்தாவை குடும்பமே தேடுகிறது. விறுவிறுப்பாகக் கதை நகர்வதால் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மற்றொரு புறம் பாண்டியன் ஸ்டோர்ஸில் வழக்கம் போல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரைத் தவிரக் கதையில் ஒரு ஸ்வாரஸ்யமும் இல்லை.

கோபி

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்த படியாக ராஜா ராணி-2 ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது. ஆல்யாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து புதிய சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார். அவர் வருகையால் சீரியல் இன்னும் சுவாரஸ்யமாகச் செல்கிறது. ஆல்யா அமைதியான சந்தியாவாக இருந்தார், ரியா அதிரடியான சந்தியாவாகப் பட்டையைக் கிளப்புகிறார்.

இந்த வாரத்துக்கான டாப் ரேட்டிங் சீரியல்கள் இவை. அடுத்த வாரம் என்ன நிலை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?